ஞாயிறு, 1 மார்ச், 2020

குமரி மாவட்டத்தில் சங்கிகள் நிறையக்காரணம்.. விரிவான ஆய்வு கட்டுரை

Suresh Kumar Sundaram : குமரிமாவட்டத்தில் சங்கிகள் நிறையக்காரணம்
1. கிறிஸ்தவம் வளர்ந்தது குமரிமாவட்டத்தில், அதேவேகத்தில் படித்த கிறிஸ்தவ நாடார்கள் வளர்சி அதைவிட வேகத்தில் போனது இதை தாங்கிகொள்ளமுடியாத NSS (நாயர் சேவா சங்கம்) மற்றும் RSS முதலில் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் கூட இருந்த தாணுலிங்க நாடாரை பிரித்து கிறிஸ்தவர்கள் மீது பகைய பொறாமை )விதைத்தார்கள். (1980 ல் பீஜேபி உருவானது) தாணுலிங்க நாடார் தான் 1982 ல் இந்துமுன்னணி என்ற அமைப்பை குமரியில் தொடக்கினார். மத/ சாதி கலவரத்தை எம் ஜி ஆர் துணையுடன் நடத்தினார்
(இவர்கள் கலவரத்தை ஏற்படுத்திய பாணியே இன்றும் RSS வட இந்தியாவில் கடைபிடிக்கின்றனர். )
இவர்களின் திட்டப்படி காங்கிரசுக்கு கண்மூடித்தனமாக வாக்களிக்கும் மீனவர்கள் , நாடார்கள் மோதலை உருவாக்குவது (நேரடியாக பெரும்பான்மையான இந்து நாடார் vs கிறிஸ்தவநாடார் மோதலை உருவாக்க முடியாது ஏன் என்றால் அவர்கள் பெண் கொடுத்தும் எடுத்தும் மட்டுமல்ல ஏற்கனவே உறவினர்கள் கூட ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்) ,
கடற்கரையொரங்களில் சைட் அடுப்பது தொடர்பாக இருசமூக இளவட்டங்களிடையே சில்லறை சண்டைகள் நடப்பதுண்டு அதனை பயன்படுத்தி ரகசியமாக NSS , கேரளா RSS மற்றும் குமரியில் பின் தங்கிய ஒரு சமூகத்தினர் சேர்ந்து ஒரு மீனவ கிராமத்து குருசடியில் (கிறிஸ்தவர்கள் சிலுவைய வழிபடும் இடம்) பெட்ரோல் குண்டை இரவில் வீசி பதட்டத்தை ஏற்படுத்தினார்கள் ,
பின்னர் அதிகாலையில் இந்து நாடார்களுக்கு சொந்தமான தென்னம் தோப்பில் புகுந்து தென்னைமரங்களை வெட்டி வீழ்த்திய பிறகு அந்த பழிய அப்பாவி மீனவ கிராம மக்கள் மீது போட்டனர்...அது கலவரமாக மாறியது. கிறிஷ்தவ நாடார்கள் வலிமையாக இருக்கும் சூரங்குடி, மறவன்குடியிருப்பு மற்றும் கிறிஸ்தவர்கள் அடர்ந்த ஊர்களில் இது இந்து , கிறிஸ்தவ பிரச்சனையல்ல இந்து நாடார், மீனவர் பிரச்சனை என்று கூறி கிறிஸ்தவ நாடார்களை மௌனம் காக்க செய்தனர்...( இன்று NRC பிரச்சனை இந்து முஸ்லீம் பிரச்சனை மற்றவர்கள் ஒதுங்கி இருங்கள் என்பதை போன்ற பார்பன தந்திரம் இது) கலவரம் ஓய்த பிறகு இந்து-கிறிஸ்தவ கலவரமாக விளம்பரபடுத்தினார்கள் பெருமைக்காக.
(இன்று டெல்லியில் கூலிபடைகளை வைத்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை இந்து முஸ்லீம் கலவரம் போல் காண்பிப்பது போன்றதே)

2.இந்த கலவரத்துக்கு பின்பு , அது தான் வாய்ப்பு என்றிருந்த நாடார் சமூகத்துடன் போட்டி போட முடியாத சிறிய சமூகங்கள் இந்த RSS பார்ப்பனர்/நாயர் கூட்டணியில் சேர்ந்தது இந்து என்ற போர்வையில். விவேகானந்தா கேந்திரம் என்ற RSS ன் துணை அமைப்பு பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி என்று அரசுபள்ளிகளில் சனிக்கிழமை சில குறிப்பிட்ட சமுதாய மாணவர்களை அழைத்து பார்பனீய கருத்துக்களை விதைத்தனர் (எம் ஜி ஆர் அரசும் தகுந்த உதவிகளை செய்தது)

3.அன்றைய காலகட்டத்தில் குமரிமாவட்டத்தில் எல்லா அரசியல் கட்சிகளிலும் கிறிஸ்தவர் அல்லாத யாரும் வட்டச்செயலாளர்களாக கூட வர முடியாத நிலையிருந்தது குமரியில்..உதாரணமாக காங்கிரசுக்கு டென்னீஸ் , மோசஸ்/ மத்தியாஸ் என்றால் திமுக வுக்கு கிறிஷ்டோபர், தர்மராஜ் , டாக்டர் ஆல்பன் , அதற்கு முன்பு பாதி இந்து பாதி கிறிஸ்தவரான எம் சி பாலன் போன்றவர்களும் அதிமுக வில் நாஞ்சில் வின்சென்டு , ஜேப்பியர், எப் எம் ராஜரத்தினம் போன்றவர் குமரி மாவட்ட அரசியலில் பிரபலமானவர்கள். இவர்களுடன் போட்டி அரசியல் போட முடியாமல் , வேறு வழியில்லாத நாயர்களும் இன்னும் சில so called உயர்சாதியினர்களும் மற்ற சிறு சாதி பிரிவினர்கள் தந்திரமாக ‘ தங்கள் சங்கி காவிய மறைத்து வைத்து கொண்டு சிவப்பு கொடி அரிவாள் சுத்தியலை ‘ நம்மள் பொது வாணு’ all are equal என்று கம்யூனிஸ்டில் சேர்ந்து கொண்டு கம்யூனிஸ்ட் தலைவர் பதவிகளை பெற்றுகொண்டார்கள்,

இவர்களில் சில இஸ்லாமியர்களும் சேர்ந்து கொண்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சியும் , அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைத்து செய்து ஒன்று இரண்டு எம் எல் ஏ , பஞ்சாயத்து தலைவர் பதவிகளை பெற்றனர்...

உதாரணமாக மற்ற சமூகம் அதிகமுள்ள தொகுதிகளில் கூட நாயர், பிள்ளை கள் தொழிற்சங்க தலைவர்களானார்கள் , எம் எல் ஏ ஆனார்கள் ( ஹேம சந்திரன், டி எஸ் மணி, போன்றோர் நான்கு முறை எம் எல் ஏ களாக இருந்துள்ளனர் இவர்கள் கம்யூனிஸ்டு போர்வையில் இருந்த அக்மார்க் சங்கிகள், இடவுரிமை, சமூக நீதிக்கு எதிரானவர்கள் , எம்ஜிஆர் கொண்டுவந்த வருமானம் அடிப்படையிலான இடவொதிக்கீட்டை ஆதரித்தவர்கள்) பின்தங்கிய தொழிளாளர்கள் சங்கத்தில் நாயர்கள் / பார்பனர்கள் கம்யூனிஸ்டு சங்க தலைவராக வாழ்கைய செழிப்பாக ஓட்டினார்கள்.

4. காங்கிரசில் இருந்தால் இனி வளரமுடியாது என்ற நிலை ( உதாரணம் காங்கிரஸ் எம் பி டென்னீஸ் எட்டுமுறை கிட்ட தட்ட 40 வருடம் இருந்தார்/ தூங்கினார்) பொன்விஜயராகவன் , குமாரதாஸ் போன்ற பலர் ஜனதா போன்ற கட்சியில் சேர்ந்து மாயமானார்கள்.

5. கிறிஸ்தவ நாடார்கள் படிப்பில் குறிப்பாக கிறிஸ்தவ பள்ளி கல்லூரி தயவில் அசுரத்தனமாக முன்னேறினார்கள், குறிப்பாக கிறிஸ்தவ பெண்கள், பெண்கள் கல்லூரி , டீச்சர் டிரெயினிங் கல்லுரி போன்றவற்றில் சேர்து படித்து வேலைக்கு செல்ல தொடங்கினார்கள் , குறிப்பாக தமிழ்நாடு மட்டுமல்ல , வட இந்தியா, மலபார் , மாலிதீவு போன்ற இடங்களுக்கு ஆசிரியர்கள் சப்ளை செய்யுமளவுக்கு வளர்ந்தார்கள்... கிறிஷ்தவ நிறுவனங்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு நிறுவனங்களிலும் நிர்வாகப்பொறுப்புகளில் உயர்ந்தார்கள்.

ஆண்களும் வேலையுள்ள பெண்களை திருமணம் செய்து டபுள் இன்கம் ஈட்டினார்கள், தமிழர்கள் பொதுவாக தயங்கும் நர்ஸ் படிப்புகளை படித்து மலையாளிகளுக்கு போட்டியாக வளைகுடா நாடுகளில் வேலை செய்து பொருளீட்டினார்கள், அடுத்த தலைமுறையினர் , மருத்துவம் மற்றும் , அவர்கள் சம்பள பணத்தை தண்ணியடிக்காமல், சிக்கனமாக எளிய வாழ்கை வாழ்தனர், கஞ்சர்கள் என்ற பெயரும் கொடுக்கப்பட்டது அவர்களுக்கு ( அந்த தலைமுறை கிறிஷ்தவ நாடார்கள் சினிமா கொட்டகைக்கு கூட போக மாட்டார்கள்) , சம்பாதித்த பணத்தை அந்த காலத்து ஆண்ட பரம்பரை நாயர், பண்ணையர்களின் நிலங்களை வாங்கி குவித்தனர்...

குறிப்பாக மரவள்ளி கிழங்கு மட்டுமே பயிராகும் வறண்ட இடங்களை குறைந்த விலைக்கு வாங்கினார்கள்..., ஏற்னவே உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் அடுத்த நிலைய நோக்கி நகர்தார்கள் குறிப்பாக மருத்துவமனைகளை கட்டினார்கள். திருவாங்கூர் ராஜியத்தில் அடிமைபட்டு உழைத்து உடல் வலிமை பெற்ற உழைப்பாளிவர்கத்தின் பிள்ளைகளில் 10 வகுப்பு தவறியவர்கள் கூட குமரி மாவட்டத்தில் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் போலிஸ் தேர்வில் அதிகமாக தேர்வு பெற்றனர்.

மற்றும் அரசு போக்குவரத்து வருவதற்கு்முன்பு தனியார் பேருந்தில் வேலை செய்தவர்கள், கலைஞர் தனியார் போக்குவரத்து துறைய அரசுடமையாக்கியபோது தானாக அவர்கள் அரசு வேலைய பெற்றார்கள் , அது போல் பல பள்ளிகளை aided school லாக மாற்றியபோது அதுவரை கூலியாக சிறிய சம்பளத்தில் வேலைபார்த்தவர்கள் அரசு சம்பளம் பெற்று செட்டில் ஆனார்கள், மேலும் பின்தங்கிய மலையொர கிராமங்களில் ரப்பர் மரம் வளர்பால் பொருளாதார வளர்சி்பெற்ற கிறிஸ்தவ நாடார் சமூகத்தினர் பணத்தை குழந்தைகளின் கல்விக்கு அதிக முதலீடு செய்ய தொடங்கினர்,

குறிப்பாக தனியார் கல்வி மோகம்( ஒரு வகையில் நல்ல முடிவு தான்) குமரியின் குக்கிராம்ம் வரை வீசியது பலர் ஆங்கில கல்விமுறைக்கு மாறி சென்னை போன்ற நகரங்களில் நகர்ந்து இன்றைய பார்பனர்களின் ஆங்கிலத்துக்கு பதில் சொன்னார்கள் ( இன்று கல்வி வியாபாரம் ஆகிவிட்டது ஆங்கிலபள்ளிகளால் , தமிழ் அழிந்துவிடும் என்று டம்மி டேசியர்களை பார்பனர்கள் தூண்டிவிட காரணமும் இதுவே) ,

நன்கொடை கொடுத்து படிக்கவைக்க இவர்கள் தயங்குவதே இல்லை. அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்றாலும் குமரியில் மட்டும் பெண்களுக்கு சொத்தில் பங்கை அதிகமாகவே கொடுத்தார்கள், அன்றைய திரிவாங்கூர் சமஸ்தானத்து தம்புராட்டி திருமணங்களுக்கு நடந்த திருமணங்களுக்கு ஒப்ப பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தனர் அதிக நகை, வரதட்சனைகளுடன். கொஞ்சம் பந்தாவும் பண்ணத்தொடங்கினார்கள் ‘குமரி கிறிஷ்தவ நாடார்கள்’ என்று கொஞ்சம் கொஞ்சமாக பிற சமுதாய மக்களிடம் , ஏழை உறவினர்களிடம் கூட விலகினார்கள் , பிறரின் கோபம், வெறிப்பு இவர்கள் மீது மெதுவாக படியத்தொடங்கியது.


6.கிறிஸ்தவர்களிக்கு போட்டியாக உருவான இந்து கல்லுரிகளில் பல உயர் பதவிகளை நாடார் போன்ற மற்ற இந்துக்களுக்கு கொடுக்காமல் மலையாளிபிள்ளை, நாயர், பிராமண கூட்டணிகள் கைப்பற்றியது பியுன் போன்ற வேலைகளை மற்வர்களுக்கு கொடுத்தார்கள், மத வெறிய மற்ற சாதிகளிடம் திணித்தனர் , உதாரணம், நாடார்களிடையே இந்து கிறிஸ்டியன் என்ற ஈகோவை வளர்ந்தனர்..( குமரி மாவட்டத்தில் இன்றைம் அண்ணன் கிறிஸ்தவ நாடாராகவும் தம்பி இந்து நாடாராக சண்டையுடன் ஒற்றுமையுடன் இருப்பது சகஜம்)


7.அதே காலகட்டத்தில் இந்து நாடார்களும் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தனர், கோட்டார் , வடசேரி போன்ற பகுதிகளில் அரசு கடைகள் ஏலம் எடுக்கும் போது மற்ற வியாபரிகளான இஸ்லாமிய வியாபாரிகளிக்கும் சில மனதளவில் சிறிய உரசல்கள் ஏற்பட்டது, அது போல் கிறிஷ்தவ நாடார் இந்து நாடார் வியாபார போட்டி சில ஊர்களிலே ஏற்பட்டது, அதையே்பார்பனீய கும்பல் எண்ணைய ஊற்றியது. முஸ்லிம் இளைஞர்களும் படிக்க தொடங்கினார்கள், மேலும் முஸ்லிம் இளைஞர்கள் மற்ற இளைஞர்களை விட எளிதில் வளைகுடா நாட்டிற்கு சென்று பொருளீட்டுனார்கள் வசதியாக வாழ்தார்கள். தொலைகாட்சி பெட்டிகள் பரவலாக வரத்தொடங்கிய 1988-98 களில் பாக்கிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டிய வைத்து இந்து இஸ்லாமிய வெறுப்பை தினமலர், தினமணி விகடன் துக்ளக், விஜயபாரதம் பரப்பியது போதாகுறைக்கு இராமாயணம் டிவி சீரியல் வேறு...


2000 த்திற்கு பிறகு... பொன் ராதா கிருஷ்ணன் ஓப்பனாகவே கிறிஸ்தவ வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கினார் , அதாவது எம் பி சீட்டுக்காகவே...மேலிடத்தின் பார்பன தலைவர்களை குஷிபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டார், உதாரணமாக இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டும் , கிறிஷ்தவ குழந்தைகள் வேன்களிலும் கார்களிலும்்ஆங்கில பள்ளிக்கு செல்கின்றது இந்து குழந்தைகள் காலில் செருப்புல்லாமல் செல்கிறது போன்ற பிரச்சாரத்தை தொடங்கினார்... இது பல இடஙலகளில் எடுபடவும் தொடங்கியது , சில கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்


ஒவ்வொரு ஊர்களிலும் சோ கால்டு உயர்சாதி நாயர், சர்மாக்கள் அறிவிக்கப்படாத தலைவராக கொண்ட குழுக்களில் ஐந்து முதல் பத்து முட்டாள் , கல்வியில், பொருளாதாரத்தில் , உழைப்பில் தோற்றப்போன மந்தபுத்தி சூத்திர , பஞ்சமர்களுக்கு கல்லெறிய பயிற்சி கொடுத்து பஸ்களை உடைக்க வைத்து பிறகு போலீசில் அவர்களே மாட்டி விட்டு வழக்குபதிவு செய்யவைத்து பிறகு முழுநேர சங்கிகளாக மாற்றினார்கள்... கம்யூனிஸ்ட், அதிமுக , போன்ற்கட்சிகளில் மறைந்து கிடந்த நாயர் , கேரளபிள்ளை சங்கிகள் தங்கள் சிகப்பு கொடிய வீசிவிட்டு பீஜேபியில் ஐக்கியமானார்கள் , கம்யூனிஸ்டு நாயர் தொழில்சங்கவாதிகள் கூட பீஜேபிக்கு உளவாளியாக மாறினார்கள் , பீஜேபி சரியான ஒரு ஒட்டு வங்கியதனதாக்கி கொண்டது...இதன் பிறகு பொன் ராதா கிருஷ்ணன் ஒருமுறை கூட்டணி தயவோடு ஒருமுறையும் மோடி போட்டோ ஷாப் அலையில் தனியாகவும் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் அவரின் சொந்த ஊரில் அவரது இந்து நாடார் சமூகம் அவருக்கு ஓட்டு போடவில்லை... அய்யாவழி மக்களும் பீஜேபி என்பது பார்பன ஜனதா பார்டி என்ற உண்மைய புரிந்து கொண்டார்கள்.

உண்மையில் , பீஜேபீயினர் குமரிமாவட்ட அத்தனை இந்து நாடார்களும் சங்கிகள் தான் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் , அது உண்மையில் தவறு, நாயர்களில் 90% இன்று சங்கிகள் மற்ற நாடார் இனத்தை போட்டியாகவோ பொறாமையாகவோ பார்க்கும் மற்ற சாதி குழுக்களில் 40-50% சங்கியாக இருக்கலாம்...ஆனால். குமரியில் சங்கிகள் தங்களை வெளிப்படையாக சங்கியாக காட்டிகொள்வார்கள்.


குமரியில் படித்த வசதியான சொந்தக்கார கிறிஸ்தவ நாடார்களின் பந்தா அல்லது அல்பத்தனமான வறட்டு கௌரவத்தை ,’பார்பனீய புத்திய’ பார்த்து கடுப்பாகி (வெறுப்படைந்து) சில உறவுகார்ர்கள் சங்கியாக மாறியிருக்கலாம்...
மற்றப்படி படித்த இந்துநாடார்களுக்கு தோள்சேலை போராட்டம் பற்றிய வரலாறும் தெரியும் , அய்யா வைகுண்டசாமி போதித்த அகிலத்திரட்டும் தெரியும், திராவிடம் கொடுத்த சமூக நீதி பற்றியும் தெரியும், பார்பனர்களின் புத்தியும் தெரியும், எம்ஜிஆரின் தொப்பிய்யும் தெரியும் ,

இப்போது அவர்கள் பீஜேபியில் பதுங்கியிருப்பது... எப்படி எதற்கு நாயர்கள் கம்யூனிஸ்டு போர்வையில் CPMல் பதுங்கியிருந்து இன்று காவிக்கொடிய தூக்கியது போல் சந்தர்ப்பம் வாய்க்கும் போது பீஜேபியிலுருந்து கறுப்பு கொடிய தூக்குவார்கள்... சும்மாவா பொன் ராதா சொன்னார் நானும் ‘திராவிடன் தான்’ என்றதும் , கவர்னர் பதவி கிடைத்தவுடன் தமிழிசை அந்த ‘ஆண்டவருக்கு’ (800 மார்க் எடுத்தவருக்கு MBBS சீட் கொடுத்தவர் தான் அன்றைய ‘ஆண்டவர்’) நன்றி என்றதும்... இன்றும் ஒரு பார்பானை பீஜேபி தமிழ்நாட்டு தலைவனாக போட தைரியமில்லாமல் ‘வெற்றிடமாய்’ பீஜேபி நிற்பதற்கும் காரணங்கள்.

இனி குமரிமாவட்டத்தில் பீஜேபீ க்கு இருண்ட காலமே... ஆனால் பக்கத்து மாநிலத்தில் காங்கிரசில் பதுங்கியுள்ள சசிதரு என்ற சங்கி திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதிய பீஜேபிக்கு தாரை வார்க தயாராகிவிட்டார்... தொகுதிக்கும் வருவதில்லை...கம்யுனிஸ்டும் டம்பி வேட்பாளரை நிறுத்த போவதாக தெரிகிறது..
-Suresh Kumar Sundaram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக