திங்கள், 2 மார்ச், 2020

பொன்.ராதாகிருஷ்ணன் ; கிருஸ்தவ மத தலைவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்படுவர்.. வீடியோ

வளன்பிச்சைவளன் : கிருஸ்தவத மத தலைவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்படுவர். நான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் அது நடந்தே தீரும் பொன்ராதாவின் கலவரத்தை தூண்டும்பேச்சு அடிமை அதிமுக அரசு வேடிக்கைபார்க்குமா? 
 நாகர்கோவிலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் பொன்ராதா கிருஸ்தவ மதத்தலைவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்படுவர். அது நடந்தே தீரும். என சூளுரைக்கின்றார்.
அவர் திட்டமாக சொல்லுவது கிருஸ்தவ சகோதரர்களை வைத்தே இந் நிகழ்வு நடக்கும் என்றும் அறிதி யிட்டு சொல்கிறார்.
1980 களில் நடைபெற்ற மண்டைக்காடு மதக் கலவரம் அன்று கிருஸ்தவ கிராமங்கள் தாக்கப்பட்டன. அன்று தாணுலிங்க நாடாரை முகமாக காட்டி இந்து முன்னணி அன்று கிருஸ்தவ மீனவர்கள் தாக்கப் பட்டனர் கேரளத்தில் இருந்து ஆர் எஸ் எஸ் வரவழைக்கப் பட்டு அன்று மதக் கலவரம் அரங்கேறி, மத துவேசத்தை உருவாக்கி அதன் மூலம் அங்கு இந்து மதவெறி ஊட்டப் பட்டு அங்கு அவர்கள் தங்களை நிலைப்படுத்தினர்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம், கோவையும் கேரள எல்லை பகுதியானதால் அங்கும் கேரள ஆர் எஸ் எஸின் கைவரிசையுடன் அங்கும் கலவரம் நிகழ்த்தப்பட்டது

இந்த இரு கலவரங்கள் மூலம் கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டுமே அவர்களால் கட்சியை சிறிதளவு வளர்க்க முடிந்தது.
இன்று மீண்டும் ஒரு மதக்கலவரம் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என பொன் ராதா வெளிப்படையாக அறிவிக்கிறார். இந்த அடிமை அரசை மிரட்டி தங்கள் எண்ணங்களை செயல் படுத்த திட்டமிடுகின்றனர். இம் முறை வித்தியாசமாக கிருஸ்தவர்களைக் கொண்டே கிருஸ்தவ மதத் தலைவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கப் போகவதாக எக்காளமிடு கிறார்.

சந்தியா மாமி பாத்திமா அலி என்ற பெயரில் இஸ்லாத்தில் ஊடுருவி இன்று ஆர் எஸ் எஸ் ஆதரவு பிரச்சாரம் செய்வதை தொலைக்காட்சி விவாதம் மூலம் தமிழக மக்கள் காண்கிறார்கள்.
அதே போல் நாகர்கோவிலை சேர்ந்த அகஸ்டின் என்பவர் தான் இன்று அகத்தியனாக பெயர் மாற்றி இந்துவாகிவிட்டதாக கூறும் இவரது இந்துத்துவா ஆதரவு பிரச்சார காணொளிகள் வருகின்றன.
பொன் ராதா கூறுவதில் இருந்து கிருஸ்தவர்கள் மத்தியில் ஊடுருவி விட்டதைப் போல் காட்சிப்படுத்துகிறார்.
அடுத்து நாகர்கோவிலில் இவர்கள் நிகழ்த்த திட்டமிடும் வன்முறை வெறியாட்டங்களை தடுக்க இடது சாரி சிந்தனையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்படையச் செய்வது அவசியம். ஏனெனில் இந்த அடிமை அதிமுக அரசின் தைரியத்தில் தான் இப்படி அவர்களால் திட்டமிட முடிகிறது. மக்களை விழிப்படையச் செய்வோம் மக்களை பாதுகாப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக