திங்கள், 16 மார்ச், 2020

என்னை விட்டுடுப்பா.." கெஞ்சிய தாயை கட்டையால் அடித்தே கொன்ற மகன்.. .. கிருஷ்ணகிரி!!

mavandhana  - /tamil.oneindia.com :  கிருஷ்ணகிரி: "என்னை விட்டுடுப்பா.." என்று
கெஞ்சியும் பெற்ற தாயை அடித்தே கொன்றுள்ளார் 24 வயது மகன்!
சொத்துக்காக நடந்த இந்த கொலையால் கிருஷ்ணகிரியே அதிர்ச்சியில் உள்ளது. கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவிலை சேர்ந்தவர் செல்வம்... இவர் லாரி டிரைவர்.. 4 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பாக்கியலட்சுமி.. 43 வயதாகிறது! இவர்களது மகன் சதீஷ்குமார்... 24 வயதான இவர் கேரளாவில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.... ஆனால் இவருக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது< பாக்கியலட்சுமிக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது... கடன் பிரச்சனை காரணமாக அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே தகராறு அடிக்கடி வந்துள்ளது... சொத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறும் அம்மாவை மகன் துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் இதே சொத்து தகராறு நடந்துள்ளது



சொத்தை எழுதி தர போகிறாயா இல்லையா என்று அம்மாவை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது... பிறகு ஆத்திரத்தில் வீட்டைவிட்டு சென்றவர், நடுராத்திரி 2 மணிக்கு வந்துள்ளார்.. அந்த நேரம் பாக்கியலட்சுமி தூங்கி கொண்டிருந்தார்.. ஆவேசம் அடங்காத சதீஷ்குமார் வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து வந்து பாக்கியலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்தார் வலி பொறுக்க முடியாமல் தன்னை விட்டுவிடுமாறு பாக்கியலட்சுமி கதறியதாகவும் தெரிகிறது.. எனினும் திரும்ப திரும்ப அவர் தலையிலேயே பலமாக அடித்தார் சதீஷ்குமார்... இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாக்கியலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சதீஷ்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் சரண் அடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாக்யலட்சுமியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சொத்துக்காக பெற்ற தாயையே மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக