ஞாயிறு, 8 மார்ச், 2020

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு .. ஓமானில் இருந்து வந்தவர்

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்  தினத்தந்தி : ஓமன் மஸ்கட்டில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட் செய்துள்ளார். சென்னை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து சென்னை வந்தவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 45 வயதுடைய நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அதில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக