திங்கள், 16 மார்ச், 2020

முடங்கிய நியூயார்க் நகரம், அமெரிக்காவில் 69 பேர் உயிரிழப்பு , மூடப்படும் எல்லைகள் Corona Global Latest Updates

BBC : ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை

இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனிலும் ஒரே நாளில் 14 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக மாறி உள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images சரி கொரோனா தொடர்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் நடந்த தகவல்களைப் பார்ப்போம்.
  • மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஐரோப்பா முழுவதும் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
  • பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுடன் தனது எல்லையை மூட திட்டமிட்டுள்ளது ஜெர்மனி.
  • ஆஸ்திரியாவில் ஐந்து பேருக்கு மேல் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இப்போது வரை 6,065 பேர் இறந்துள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 3,085 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்

  • உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 162,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் கொரோனா வைரஸை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உள்ள போதும், ஆசியப் பங்குச் சந்தைகள் இறங்கு முகமாகவே உள்ளன.
  • தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 74 பேருக்கு கொரோனா இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் அங்கு இதுவரை 8,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 பேர் பலியாகி உள்ளனர்.
  • கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீனாவில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
  • கொரோனா அச்சம் காரணமாக நியூயார்க் நகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. உணவகங்களும், மதுபான விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக