ஞாயிறு, 29 மார்ச், 2020

தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு; சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு; சுகாதார துறை செயலாளர் அறிவிப்புதினத்தந்தி:  தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்து உள்ளார். சென்னை, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்திலும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, கொரோனா வைரஸ் பாதிப்புள்ள 43 ஆயிரத்து 538 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 
தமிழகத்தில் 8 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள்.  அந்த 4 பேரில் 10 மாத குழந்தை ஒன்றுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது.  ஈரோட்டை சேர்ந்த இவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டில் இருந்து திரும்பிய 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
89 பேர் பரிசோதனை முடிவுகளுக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர். 

5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  காலை வரை 42 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக