திங்கள், 9 மார்ச், 2020

கொரோனா..1.6 கோடி பேரை தனிமைப்படுத்த இத்தாலி அதிரடி முடிவு.. தப்பியோடும் மக்கள்.. பரபரப்பு

  veerakumar -  tamil.oneindia.com : லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், இத்தாலியில் இறப்பு விகிதம் அதிகரித்ததை தொடர்ந்து, 16 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தனிமைப்படுத்தும் திட்டத்தை அந்த அரசு கையில் எடுத்தது. இந்த தகவல் ஊடகங்களில் கசிந்ததால், பீதியடைந்த மக்கள் தப்பியோட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிலன் நகரம் உட்பட இத்தாலியின் வட கிழக்கிலுள்ள லோம்பார்டி மண்டலம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறது. இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை, 366 ஆக உயர்ந்துள்ளன. 24 மணி நேரத்தில் 50% க்கும் அதிகமான பாதிப்பு விகிதம் அங்கே நிலவுகிறது. மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 7,375 ஆக உள்ளது
1 கோடியே 60 லட்சம் இந்த நிலையில்தான், வூஹான் மாகாணத்தை சீனா லாக் செய்ததை போல, இத்தாலியின் வட கிழக்கு பிராந்தியத்தை முற்றிலும் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்க இத்தாலி முடிவு செய்தது. சுமார் 1 கோடியே 60 லட்சம் மக்கள், இதுபோன்ற தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
 கசிந்த தகவல் ... மக்கள் வெளியேறுவதையோ அல்லது பிராந்தியத்திற்குள் நுழைவதையோ தடைசெய்யும் வரைவு ஆணை, சனிக்கிழமை பிற்பகல் மீடியாக்களில், வெளியானதையடுத்து, மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்கள் அல்லது தங்கள் கார்களை நோக்கி ஓடினர். தெற்கு இத்தாலி பகுதிக்கு செல்ல அவர்கள் முயன்றர். பலரும் போலீசாரால் தடுக்கப்பட்டுள்ளனர்.

பிற பகுதிகளுக்கு செல்வது, அங்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால், போகக்கூடாது என தடுக்கப்படுகிறார்கள்"செய்தி லீக்கானதும் பலர் தப்பிக்க முயன்றனர், அது அரசின் முயற்சிக்கு எதிர் விளைவை ஏற்படுத்தியுள்ளது" என்று மிலனில் உள்ள வீடா-சல்யூட் சான் ரஃபேல் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் மற்றும் வைராலஜி பேராசிரியர் ராபர்டோ புரியோனி எச்சரித்தார். "துரதிர்ஷ்டவசமாக தப்பி ஓடியவர்களில் சிலர் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள்." என்று அவர் கூறினார்

வெறிச்சோடின
திருமணங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு பகுதிில் அதிக பாதிப்பு என்றாலும் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கையை இந்த கட்டுப்பாடுகள் சீர்குலைக்கின்றன. இத்தாலியிலுள்ள சுற்றுலா பயணிகள் எப்படியாவது தாயகம் திரும்பிவிட முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக