வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

Tamil Nadu Budget 2020: எந்தெந்த திட்டம், துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

BBC :தமிழக அரசின் 2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதை பல்வேறு துறைசார் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியல் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தொகுக்கப்பட்டுள்ளது.
திட்டம்/ துறை நிதி ஒதுக்கீடு (கோடி ரூபாய்களில்) 2020 -2021 நிதி ஒதுக்கீடு (கோடி ரூபாய்களில்) 2019-2020



தமிழ் வளர்ச்சித் துறை 74 54



பள்ளிக் கல்வித்துறை 34,181 28,757



உயர் கல்வித்துறை 5,052 4,584



வேளாண்துறை 11,894 10,550



சுகாதாரத்துறை 15,863 12,563



காவல்துறை 8,876 8,084



தொல்லியல் துறை 31.93 -



தகவல் தொழில்நுட்பம் 153 -



எரிசக்தித்துறை 20,115 18,560



மீன்வளத்துறை 1,229 927.85



கால்நடைத்துறை 199 1,252



நெடுஞ்சாலை துறை 15,850 13,605 (சிறு துறைமுகங்கள் சேர்த்து)



போக்குவரத்துத்துறை 2,716 1,297



ஊரக உள்ளாட்சி வளர்ச்சி 6,754 5,178



நகராட்சி நிர்வாகம் 18,540 18,700



உணவு மானியம் 6,500 6,000



அம்மா உணவகம் 100 -



மெட்ரோ ரயில் 3,100 2,681



பேரிடர் மேலாண்மை 1,360 825



நிர்பயா திட்டம் 71 -



ஊரக வளர்ச்சி துறை 23,161 18,273



இந்து சமய அறநிலைய துறை 281.17 281

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக