ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

டெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி? . தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? அதிர்ச்சி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால்!

tamil.oneindia.com : டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த சதவிகிதம் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த சதவிகிதம் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது என்று டெல்லி தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.வரும் 11ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த சதவிகிதம் குறித்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலைதான் அறிவிக்கப்பட்டது. இந்த தாமதம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், எனக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஏன் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
தேர்தல் முடிந்து பல மணி நேரம் ஆகிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். இவரின் இந்த டிவிட் டெல்லி தேர்தல் களத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரின் கருத்துக்கு பின்பே டெல்லி தேர்தல் ஆணையம் இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டது.

 முன்னதாக டெல்லியில் கடைசி நேரத்தில் அதிக அளவு வாக்குகள் பதிவானதாக சந்தேகங்கள் எழுந்தது.அதாவது 5 மணிக்கு பிறகு வேகமாக வாக்குகள் பதிவானது. ஒரு மணி நேரத்தில் 10% வாக்குகள் பதிவானது. திடீர் என்று இப்படி அதிக அளவில் வாக்குகள் பதிவானது பலருக்கும் சந்தேகத்தை தந்தது.

இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். பல இடங்களில் வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக