புதன், 12 பிப்ரவரி, 2020

மாலை­தீவில் நீச்­ச­லு­டை பெண்ணின் உடலை மறைக்கக் முயன்ற பொலிஸார்!- (வீடியோ)

metronews.lk:  மாலை­தீவில் நீச்­ச­லு­டை­யுடன் காணப்­பட்ட வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­yinயின்  உடலை மறைப்­ப­தற்கு பொலிஸார் பல­வந்­த­மாக நட­வ­டிக்கை மேற்­கொண்­டமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இதனால் மாலை­தீவு பொலிஸ் திணைக்­க­ளத்தின் தலை­வ­ரான பொலிஸ் ஆணை­யாளர் மன்­னிப்பு கோரி­யுள்ளார்.
 Cecilia Jastrzembska மேற்­படி யுவதி பிரிட்­டனைச் சேர்ந்த தொலைக்­காட்சிப் பிர­ப­லங்­களில் ஒரு­வ­ரான சிசி­லியா ஜஸ்­டிர்­ஸெம்ஸ்கா என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.> உல்­லாசப் பய­ணத்­துக்குப் பிர­சித்தி பெற்ற நாடு­களில் ஒன்­றான மாலை­தீவின் உல்­லாசப் பகு­தி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இடங்­களில் பெண்கள் பிகினி எனும் நீச்­ச­லு­டைய அணிய அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால், சுற்­றுலாப் பிர­தே­சங்கள் தவிர்ந்த இடங்­களில் நீச்­ச­லுடை அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை.
Cecilia-Jastrzembska-1 மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) Cecilia Jastrzembska 1Police-commissioner மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) Police commissionerஇந்­நி­லையில் மாலை­தீவின் தீவு­களில் ஒன்­றான மாபு­ஷி­யி­லுள்ள கடற்­க­ரையில் கடந்த வியா­ழக்­கி­ழமை நீச்­ச­லு­டை­யுடன் சிசி­லியா காணப்­பட்டார்.
அப்­போது மாலை­தீவு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் அவரின் உடலை மறைப்­ப­தற்கு முயற்­சித்­தனர்.
துவாய் ஒன்றின் மூலம் சிசி­லி­யாவின் உடலை மறைப்­ப­தற்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் முயற்­சித்­தனர்.
இதனால், மேற்­படி ஆண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் சிசி­லி­யா­வுக்கும் இடையில் இழு­பறி நிலை ஏற்­பட்­டது.
 தன்னை பாலியல் ரீதியில் பொலிஸார் தாக்­கு­வ­தாக சிசி­லி­யா கூறினார்.
இதன் போது பதி­வு­செய்­யப்­பட்ட காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கின.
26 வய­தான சிசி­லியா ஜஸ்­டிர்­ஸெம்ஸ்கா, பிரிட்­டனில் ஃபெர்ஸ்ட் டேட்ஸ், நின்ஜா வோரியர் முத­லான தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளிலும் பிர­ப­ல­மா­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் மேற்படி சம்பவத்துக்காக மன்னிப்புக் கோருவதாக மாலைதீவின் பொலிஸ் ஆணையாளர் மொஹம்மத் ஹமீத் தெரிவித்துள் ளார்.
இவ்விடயத்தை பொலி ஸார் சிறந்த முறையில் கையாண்டிருக்கலாம் என அவர் தெரிவித் துள்ளார்.
  

மாலைதீவு பொலிஸ் ஆணையாளர் மொஹம்மத் ஹமீத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக