செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கன்னட திரைப்பட பாடகி சுஷ்மிதா தூக்குப்போட்டுத் தற்கொலை..

Raj -  tamil.filmibeat.com :  பெங்களூரு: பிரபல இளம் பின்னணி பாடகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இளம் பின்னணி பாடகி சுஷ்மிதா. கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்தவர் இவர். பெங்களூரில் கணவருடன் வசித்துவந்தார். 
இவர் ஹாலி துப்பா, ஶ்ரீசமன்யா உட்பட பல கன்னடத் திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். சாப்ட்வேர் என்ஜினீயர்
இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன், சாப்ட்வேர் என்ஜினீயர் சரத்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் பெங்களூரில் உள்ள குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் சரத்குமாரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு அதிகரித்துள்ளது.
இதனால் மனம் வெறுத்த சுஷ்மிதா, அன்னபூர்னேஸ்வரி நகரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு தனது அம்மா மற்றும் சகோதரனுடன் சகஜமாக பேசியவர், தூக்கம் வருவதாகக் கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார். அதிகாலை நேரமாகியும் வரவில்லை. தாமதமாக எழுந்திருப்பார் என்று நினைத்தனர். 
பின்னர் தங்கள் மொபைல் போனை பார்த்தபோதுதான், அதில் சுஷ்மிதா அனுப்பியிருந்த தற்கொலை மெசேஜ் இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது, வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருந்தார் சுஷிமிதா. அவர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொடுமைப் படுத்துகிறார் கொடுமைப் படுத்துகிறார் சுஷ்மிதா மெசேஜில், அம்மா என்னை மன்னித்துவிடு. மாமியாரின் பேச்சைக் கேட்டு என் கணவர் என்னை கொடுமைப் படுத்துகிறார். மனரீதியாக கடும் துன்பத்துக்கு ஆளாகிவிட்டேன். நான் எதிர்த்து ஒரு வார்த்தை பேசினாலும் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விடுவார்கள். அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது இந்த முடிவுக்கு கணவர் சரத்தும் கீதாவும்தான் முக்கிய காரணம். 
சரத் பிடிவாதக்காரர். நான் என்ன கதறினாலும் என் பேச்சை கேட்கவே மாட்டார். திருமணமான நாளில் இருந்தே என்னை டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார். இதுவரை இதை யாரிடமும் சொல்லவில்லை. எனக்கான இறுதிச்சடங்கை நமது சொந்த ஊரில் நடத்துங்கள். என்னை கொடுமைப்படுத்தியவர்களை விட்டுவிடாதீர்கள். நீங்கள் தண்டிக்கவில்லை என்றால் என் ஆத்மா சாந்தி அடையாது' என்று கூறியுள்ளார்.
 இதையடுத்து சுஷ்மிதாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கணவர் சரத் மற்றும் அவர் குடும்பத்தினரை தேடி வருகின்றனர். இளம் பாடகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கன்னட சினிமாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக