செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸ் : மருந்துப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தடை

polimernews.com : கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக முக்கிய சில மருந்துப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சில மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், உலகின் மற்ற நாடுகளை போலவே கோடிக்கணக்கான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவும் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது என்றார்.
மேலும்  உள்நாட்டில் தட்டுப்பாடுகள் உள்ள ஒருசில மருந்துப்பொருட்கள், உபகரணங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக