வியாழன், 20 பிப்ரவரி, 2020

அமெரிக்கா : புதிய இந்தியா குடியுரிமைச் சட்டம் நாட்டின் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும்!

தினத்தந்தி : இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) தெரிவித்துள்ளது.
வாஷிங்டன். சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- குடியுரிமை (திருத்த) சட்டம் 2019 மற்றும் தேசிய குடியுரிமை பதிவு ஆகியவை பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலையற்றவர்களாக மாறக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் முதன்மையாக தேசிய குடியுரிமை பதிவில் இருந்து விலக்கப்படுவதன் மூலம் விளைவுகளைச் சுமப்பார்கள், அதில் நிலையற்ற தன்மை, நாடுகடத்தல் அல்லது நீண்டகால தடுப்புக்காவல் ஆகியவை அடங்கும். முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து விலக்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்திய பாஜகவின் பல்வேறு தலைவர்களின் கருத்துகளையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

 இந்துத்துவா அரசியல் சொல்லாட்சி முஸ்லிம்களின் இந்திய குடியுரிமையின் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது மற்றும் இந்த நம்பிக்கை சமூகத்தில் மேலும் ஓரங்கட்டப்படுவதை நிலைநிறுத்துகிறது. எடுத்துக்காட்டாக, உத்தரபிரதேச பா.ஜனதா முதல்வர் யோகி ஆதித்யநாத், 2005 ல் மற்ற மதங்களை இந்தியாவில் இருந்து சுத்தப்படுத்துவதாக உறுதியளித்தார்,
 இதை ‘இந்துத்துவாவின் நூற்றாண்டு’ என்று அழைத்தார் என அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அறிக்கை வந்துள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. நேற்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்க்லாவைச் சந்தித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமி பெரா மற்றும் ஜார்ஜ் ஹோல்டிங் ஆகியோரால் அரசிற்கு இதேபோன்ற கவலைகள் தெரிவிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக