சனி, 29 பிப்ரவரி, 2020

அருந்ததியர்கள் ஏன் துப்புரவு பணியில் குறிப்பாக மனித மலமள்ளும் நிலை வரை .....?.

தங்கராஜ் காந்தி  : அருந்ததியர்கள் ஏன் துப்புரவு பணியில் குறிப்பாக
மனித மலமள்ளும் நிலை வரை தள்ளப்பட்டதன் விளைவிற்கு காரணம் யாதென சற்று தூரம் வரலாறை பின்னோக்கி பார்த்தால்,
வலங்கை(ஆதிக்கம்)
இடங்கை(சமூகநீதி) போர்களில்
இடங்கை பக்கம் நின்று‌ பலமாக
யுத்தகளத்தில் ‌போர்‌செய்தது அருந்ததியர்கள் என துவங்கி...

சமூகநீதிக்கு எதிராக சொந்த தமிழ்மன்னர்களாலும்...
அவர்களை வீழ்த்த வந்த தெலுங்கு மன்னர்களோடு‌ கைகோர்த்தாவது தெலுங்கு பேசத்தெரிந்தாவது‌ போரை சந்திப்பது என..‌
பிற்கால போர்க்கள கொடூரத்தாக்குதல்காரர்கள் என‌ பெயரெடுத்து நீண்டு..
வெள்ளையனை போட்டு ஒத்தையா மோதியும்‌ மொத்தமா
சாத்தியும்‌ விட்டதில் வந்து‌ ஓய்கிறது சக்கிலியர்களின்‌ பராக்கிரமம்...
அதன்விளைவாய் தேடிப்பிடித்து துப்புரவு பணிக்கு ஆளாகியுள்ளோமே தவிர, மற்றபடி அருந்ததியர்கள் வேட்டை‌‌ முதல் வேளான்‌ மற்றும்‌ போர்‌மரபினர்.
பெரியார் காலத்தில் அவரது கொள்கைக்கு கடமைபட்டவர்களாய் நின்று இன்று பார்ப்பனர்கள் அஞ்சும்‌ ஒரு டிஎன்ஏ.வாக இருப்பதும் ஒரு காரணம் தான்...
ஆகவே,
அருந்ததியர்கள் திட்டமிட்டு கல்வி மறுப்பு‌ முதல் இழப்பீடு தவிப்பு வரை வெச்சு செய்கிறது பிற்கால பார்ப்பன இந்தியா...
என்ன கொடுமை என்றால் யாருக்காக எல்லாம் போராடினார்களோ அவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக கொள்கையை தூக்கிப்போட்டு போனதால், எல்லோராலும் கைவிடப்பட்டு கடைநிலைக்கு சென்றவன்...
அருந்ததியன்.

கடைசி நம்பிக்கையான பெரியார் உணர்வாளர்‌ கூட்டமைப்பின் குடந்தை அரசன்
இப்படி‌ சமூகநீதிக்கு எதிராக உள்இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனு செய்திருப்பது கடைசி நொடியும் கைவிடப்பட்ட அருந்ததியர்களின் தொடர் நிக்ழ்வுகளில் ஒன்று...
அதற்காக ஒரு போதும், கிருஷ்ணசாமி‌ போல வலங்கையை ஆதரித்திட மாட்டோம்.
முடிவாக
இனி, நாங்கள் கட்டளை இடும் இடத்திற்கு வந்தால்தான் பார்ப்பனிய இந்துதுவா இந்தியாவை விட்டு தலைதெறித்து ஓடும் போலும்...!
திருப்பி அடிக்க வேண்டாம்.. முதல் அடியாகவே நாம் அடிக்க வேண்டுமென உறுதி ஏற்காமல் பயனில்லை.
- தங்கராஜ் காந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக