ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘.. ரஜினி அண்டு குருமூர்த்தி கேங் பின்னணி?

- ஜூனியர் விகடன் : ‘‘ஏன் இந்தத் திடீர் ரெய்டு?’’
‘‘ரஜினிதான் காரணம் என்கின்றனர். `தர்பார்’ படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சில விநியோகஸ்தர்கள் தரப்பில் போர்க்கொடி உயர்த்தப்பட்டது. ரஜினியை நேரில் சந்தித்து நஷ்டஈடு பெறவும் முடிவெடுக்கப்பட்டது. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த விநியோகஸ்தர்களைத் தூண்டிவிட்டதே, அவர்களுக்கு ஃபைனான்ஸ் செய்த அன்புச்செழியன்தான் என்று கூறப்படுகிறது.’’
‘‘ஓஹோ...’’
‘‘இதுகுறித்து பிரபல ஆடிட்டரிடம் ரஜினி விவாதித்ததாகவும் கூறப்படு கிறது. ரஜினிக்குத் தெம்பூட்டிய அந்த ஆடிட்டர், டெல்லிக்கும் தகவலை பாஸ் செய்துவிட்டாராம். இதன் பிறகே ரஜினியைச் சீண்டிய அன்புமீது வருமானவரித் துறை பாய்ந்ததாம். சமீபத்தில் ரஜினியின் பெரியார் பற்றிய பேச்சுக்கு
ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தனர். `அப்படிப் பேசக் கூடாது’ என்று அவர்களுக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம்.’’

‘‘அடேங்கப்பா... ரஜினிக்காக ஏன் இவ்வளவு தூரம் பா.ஜ.க இறங்கிவருகிறது?’’
ஏ.ஜி.எஸ் நிறுவன பங்குதாரர் கல்பாத்தி அகோரம் வீடு - அன்புச்செழியனின் சென்னை அலுவலகம்
ஏ.ஜி.எஸ் நிறுவன பங்குதாரர் கல்பாத்தி அகோரம் வீடு - அன்புச்செழியனின் சென்னை அலுவலகம்
‘‘வேறென்ன... எல்லாம் எலெக்‌ஷனுக்கான கூட்டணிக் கணக்குதான். ரஜினி மீதிருந்த வருமானவரி வழக்குகளை எல்லாம் பைசல் செய்துவிட்டனர். அதற்கு பிரதி உபகாரமாகத்தான், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருக் கிறார். வழக்கமாக, ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிப்பார் பிரதமர் மோடி. இந்த முறை பிரதமர் வாழ்த்து தெரிவிக்காதபோதே சுதாரித்து இறங்கி வந்துவிட்டாராம் ரஜினி. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ரஜினியுடன் கைகோக்க விரும்பும் பா.ஜ.க, சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கவும் திட்ட மிட்டிருக்கிறது.
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக