வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

காதலர் தினத்துக்கு எதிராக இந்து முஸ்லிம் தீவிரவாதிகளின் அடாவடி பிரசாரம்

    ஆலஞ்சியார் : காதல் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் இணைந்து சுற்றுவது விபச்சாரம்
..தவ்ஹீத்ஜமாத் ..
ஆணும் பெண்ணும் தனியாக பீச் பார்க்கில் இருந்தால் திருமணம் செய்துவைத்து லாட்ஜ் புக் செய்து கூடவே 25,000 பணமும் தருவோம் இந்துமுன்னணி.. ..
இந்து முன்னணிகாரர்களின் பேச்செல்லாம் செல்லாகாசு என்பதால் அதை காரியமாக்க தேவையில்லை ..
ஆனால் தாங்கள் நேர்வழியில் என்பவர்களிடத்தில் தான் பேச வேண்டியிருக்கிறது .. இவர்கள் யார் எது விபச்சாரமென முடிவு செய்ய ஒருவரின் தனி சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ..
காதல் ஏதோ கெட்ட காரியம் போலவும் இவர்கள் மட்டுமே ஒழுக்கமானவர்கள் போலவும் இவர்கள் மட்டுமே சிறந்தபாதையில் செல்வது போலவும் எத்தனைகாலம் ஏமாற்றி திரிவார்கள் .. ஒரு பெண்ணும் ஆணும் தனித்திருந்தாலே அவர்கள் கெட்டவர்கள் என்பதைபோல இவர்கள் பேசி திரிவது எந்தவகை நாகரீகம் . ..
காதல் புனிதமானதென்றெல்லாம் சப்பைகட்ட வரவில்லை மாறாக காதல் இயல்பானது ..
ஒவ்வொருவர் மனதிலும் வந்து போகும் உணர்வு .. யாரை யாரை வேண்டுமானாலும் விரும்புவதற்கோ வெறுப்பதற்கோ தடைபோட நாம் யார் .. எது தேவையென உணரும் போது அவர்கள் தங்களுக்கு நம்பிக்கை தருகிறவர்களை நேசிப்பது ஏதோ மிகப்பெரிய குற்றம் போல சித்தரிக்கிறார்கள்
ஏதோ ஒன்றிரண்டு தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் காதலில் புரிதலில் பிழையாகி மகிழ்ச்சியை இழந்திருக்கலாம் தவறான தேர்வால்
துன்பம் ஏற்பட்டிருக்கலாம் இது காதலில் மட்டும் நிகழ்வதில்லை ..
அதற்காக அத்தனை பேரையும் ஒரே நோக்கில் காண்பது அறிவுடைசெயலா .. மதம் தலைக்கேறிய விவரகேடுகளின் செயல் இது ..
மற்றவர்களை நோக்கி குற்றம்சுமத்துகிறவர்கள் தங்களை நியாயவான்களாக காட்ட நினைத்து தோல்வி கண்டவர்கள்.. தனிமனித செயல்களை இவர்கள் வரையறுக்க நினைப்பது அடிமுட்டாள்தனம் .. மதவெறி முத்திப்போய் தன்னை சுற்றி நிகழும் இயல்பான விடயங்களை கூட குற்றம் காண்கிற போக்கு ஆபத்தானது .. யாருடைய நடத்தையையும் குற்றம் சுமத்த நமக்கென்ன அருகதை இருக்கிறதென்று தவ்ஹீத்ஜமாத் முதலில் யோசிக்கவேண்டும் ..
..
இஸ்லாமியர்களிடையே காதல் வந்ததே இல்லையா பண்டைய அரேபிய தேசத்து வரலாற்றை படித்துபார்த்தால் காதலின் உணர்வு புரியும் .. காதல் எத்தனை ரசகரமானதென்று நமக்கு விளங்கும் .. இஸ்லாமிய அறிஞர்கள் பலரின் வரலாற்றில் காதல் பேசும்பொருளாக இருந்திருக்கிறது .. காதல் அன்பின் அடையாளமாய் .. இல்லற வாழ்வின் வாக்குறுதியாய் இருந்த வரலாற்று நிகழ்வுகள் நிறைய காணலாம் .. "கணவனிடமிருந்து பிரிந்த பெண்ணை திருமணம் முடிக்க அவர் "இத்தா " இருக்கிற காலத்தில் வாக்குறுதியை தராதீர்கள் உங்கள் மனதில் இருப்பதை அவர் அறிவார் எனினும்" .. என்ற நபிமொழி எத்தனை தூய்மையான காதல்மொழி ..
..
பித்தர்களே மதம் தலைக்கேறி செய்வதறியாது உளறிக்கொட்டுகிறீர் .. மற்றவர்களை குறை கூறும் முன் சுயம் பரிசோதித்துக்கொள்ளுங்கள் .. சொந்த சமுதாயத்திலேயே குழப்பத்தை விளைவித்து .. உறவெனும் பிடிப்புள்ள கயிற்றை அறுத்து .. சேர்ந்துவாழந்த சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி .. மதபோதகர் என்ற பெயரில் காமலீலைகளை அரங்கேற்றி .. அசிங்கபட்டு சமுதாயத்தையே கேவலபடவைத்தவர்கள் .. பொது சமூகத்திற்கு புத்தி சொல்ல தகுதியை இழக்கிறீர் ..
முதலில் தனி மனித ஒழுக்கம் நேர்மை ஒற்றுமை நேசம் அன்பு ..காதல் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ளுங்கள் காதலென்பது அன்பின் வெளிப்பாடு காதல் என்பது தன்நம்பிக்கை தரும் தன்னையே மெருகூட்டும் தன்னையே உயர்வாக எண்ணவைக்கும் அழகிய உணர்வு .. காதல்
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக