ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸ் பற்றி போலி இஸ்லாமியப் பாடம் எடுக்க வராதீர்கள்.....

Rishvin Ismath : கொரோனா வைரஸை வைத்து ஆஹா, ஓஹோ என்று இஸ்லாமிய மதப் பிரச்சாரம் முன்னெடுக்கப் படுகின்றது.
<<ஹதீஸ்>> :
‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது, அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.
<<ஹதீஸ் முடிவு>>

இதனைச் சொல்வதற்கு ஒரு விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர் தேவையா? ஒரு ஊரில் தோற்று நோய் பரவினால் அந்த ஊருக்குப் போகாதீர்கள், அங்கிருந்து வெளியேறாதீர்கள் என்று சொல்வதற்கு அனுபவ அறிவே போதுமானது. முஹம்மது உண்மையிலேயே இறை தூதராக இருந்திருந்தால், கொரொனோ வைரசிற்கான தடுப்பூசியை எப்படி தயாரிப்பது என்பதை அல்லவா ஹதீஸில் சொல்லி இருந்திருக்க வேண்டும்? அப்படிச் சொல்லி இருந்திருந்தால் காட்டுங்கள் முஹம்மது இறைதூதர்தான் என்று நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
இதே முஹம்மதுதான் சொல்கின்றார், தோற்று நோய் என்று ஒன்று இல்லை என்று.

சரி, இவ்வளவு பெரிய கதை சொல்கின்ற தாயிகளிடத்தில் ஒரே ஒரு கேள்வி, சாப்பிடுவதற்கு முன்னர் கட்டாயம் கை கழுவ வேண்டும் என்று முஹம்மது சொன்ன ஒரு ஹதீஸாவது இருந்தால் கொண்டுவந்து காட்டுங்கள், இந்தப் பதிவையே அழித்து விடுகின்றேன்.
முஹம்மது சாப்பிடுவதற்கு முன்னரும், சாப்பிட்ட பின்னரும் கை கழுவும் பழக்கம் உள்ளவராக இருந்தார் என்றாவது ஒரு ஹதீஸ் காட்ட முடியுமா?
முடியாவிட்டால் சுத்தம் பற்றி, வைரஸ் பற்றி போலி இஸ்லாமியப் பாடம் எடுக்க வராதீர்கள்.
காட்டுல கக்கா போயிட்டு மூணு கல்லாலை தொடச்சிட்டு போனவரை எல்லாம் உலக மாகா முன்மாதிரின்னு நம்புற கூட்டம்தான் வைரஸ் பற்றி பாடம் எடுக்குது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக