வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

அன்புசெழியனை காப்பாற்றும் அமைச்சர்கள்!

 - madurai -நக்கீரன் : பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர். அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய தமிழ் திரைப்பட உலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு இரண்டு முறை அன்புசெழியன் வீட்டில் சோதனை நடந்துள்ளது. ஆனால் ஒருமுறை கூட அவர் நேரில் ஆஜராகவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அன்புசெழியனுக்கு தமிழக அமைச்சர்கள் சிலர் அதிக செல்வாக்கு உள்ளது. இவர் மீது குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் அந்த அமைச்சர்கள் தலையிட்டு இவரை காப்பாற்றி விடுவார்கள். தற்போதும் அன்புசெழியனை அந்த அமைச்சர்கள்தான் காப்பாற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

அன்புசெழியன் சிக்கினால், தமிழக அமைச்சர்கள் சிலரும் வருமான வரித்துறையில் சிக்குவார்கள் என்பதால் அன்புசெழியனை காப்பாற்றி வருகிறார்கள். அன்புசெழியன் வீட்டில் ரெய்டு நடந்ததையடுத்து, அமைச்சர் ஒருவர் டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக