செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

திராவிடம் சூத்திர ஜாதியினருக்கு எதையும் செய்யவில்லையா? சமுக வலை கருத்து பரிமாற்றங்கள் ...

Rettaivaal Kuruvi : திராவிடம் பஞ்சம ஜாதியினருக்கு அதை செய்தது இதை செய்தது என்றால் திராவிடம் சூத்திர ஜாதியினருக்கு எதையும் செய்யவில்லையா?
இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு என்பது SC&ST,BC&MBC ஒட்டுமொத்தமாக சேர்ந்து 50% சதவீதம்.
இப்போது சந்தடி சாக்கில் அலுங்காமல் குலுங்காமல் பார்ப்பனர்கள் 10% சதவித இட ஒதுக்கீட்டை லவடிக்கொண்டு போனது தனிக்கதை.ஏற்கனவே இருக்கும் 50% சதவீதத்தையும் சேர்து இப்போது 60% சதவீதம் என்ற புள்ளியை தொட்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் 69& சதவீதம்.
SC:15%
SC:(A)3%
ST:1
BC:26.5(Hindu)
BC:3.5(Muslim)
MBC:20%
MBC:20+BC:30=50
இந்த 50% சமத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?அல்லது ஆதிகவாதிகளை அதிகார ஆதிக்கவாதிகளாக மாற்றியிருக்கிறதா?
உங்கள் பதிலை மறுமொழியில் பதிவு செய்யுங்கள்.

Sathish U : நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன். என் பெற்றோர்கள் பட்ட அவமானத்தில் இருந்து என்னை காப்பாற்றியது திராவிடம் தான்.நான் திராவிடம் பக்கம் தான் நிற்பேன். ஆனால் மாற்று தோழர்கள் எதையுமா ஒத்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை. எல்லாத்துக்கும் ஒரு கதை வசனம் எப்பவுமே ready இருக்கு. எது அவர்களை தடுக்கிறது.
Rettaivaal Kuruvi Sathish U உங்களைப் போல் வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறவர்கள் வெகு சிலரே.பலபேருக்கு தாங்கள் இந்த இட ஒதுக்கீடு வழியாக தான் இந்த இடத்தை அடைந்தோம் என்று கூட தெரியாது.


 Ravishankar Ayyakkannu : பட்டியல் இனத்தவருக்குக் கூட இட ஒதுக்கீட்டின் அருமை முழுமையாகத் தெரியாது. அதனால் தான் அவர்களுள் கூட ஆண்ட பரம்பரை பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். பட்டியலை விட்டு வெளியேற்று என்கிறார்கள்.

Manoharan Thangavel சூத்திரர்கள் நிறையவே பலனை அனுபவித்திருக்கிறார்கள். இதை செய்தது திராவிடம் தான். ஆனால் திமிர் ஆணவம் பிடித்த கிறுக்கனுங்க இதை ஒத்துக்க மாட்டானுங்க. 2 Ravishankar Ayyakkannu : ராவிடம் பஞ்சம ஜாதியினருக்கு அதை செய்தது இதை செய்தது என்றால் திராவிடம் சூத்திர ஜாதியினருக்கு எதையும் செய்யவில்லையா?// நிறைய செய்திருக்கிறது. எல்லா மக்களுக்கும் சமமாகச் செய்கிறது. அதனால் தான் அனைத்து மக்களும் மீண்டும் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். Rettaivaal Kuruvi : இது நமக்கு தெரியும்.ஆனால் திராவிட சாதனை இட ஒதுக்கீடு என்றாலே அது பஞ்சம ஜாதியினரை வைத்து தான் உதாரணம் காட்டபடுகிறது.தவறாமல் பிச்சை என்ற வார்த்தை சேர்க்கப்படும்.

Ravishankar Ayyakkannu : பல கோடி பேர் உள்ள இயக்கத்தில் ஒருவர் ஒரு முறை சொன்ன கருத்தைப் பிடித்துத் தொங்க வேண்டாம். அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். Rettaivaal Kuruvi : அவர் என்று இல்லை.திராவிடம் பேசும் பலர் அப்படி தான் பேசுகிறார்கள்.நீங்கள் எல்லோரையும் unfollow செய்துவிட்டதால் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.பிச்சை/அடிமைகள்/இவனுங்க எல்லாம் ஒரு ஆளா etc என்ற சொல்லாடல் திராவிட பேசும் சில பல மேதைகளால் அவ்வப்போது உதிர்கப்படு வார்த்தைகள்.

 Ravishankar Ayyakkannu :  அவர்கள் அவ்வாறு பேசுவது தவறு. இயக்கத்தின் தலைமை சரியாக இருக்கும்  வரை அடிமட்ட வெறியர்கள் பற்றி நான் அலட்டிக் கொள்வது இல்லை. விசிக கட்சியினர் கூட கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக பல மாவட்ட நண்பர்கள் கதறுகிறார்கள். அதற்காக தலைவர் திருமா மீதோ விசிக மீதோ அவர்கள் கொள்கை, உரிமை முழக்கம் குறித்தோ என்னுடைய மதிப்பு குறைந்து விடுமா என்ன? Ravishankar Ayyakkannu நேற்றய என் பதிவில் திமுக வன்னியர் இட ஒதுக்கீட்டைத் தந்தது பற்றி எழுதி இருந்தேன். OBC இட ஒதுக்கீட்டுக்குத் திராவிட இயக்கம் உழைத்தது பற்றி 30 பதிவுகளாவது எழுதி இருப்பேன் .

ஒருவர் பயன்படுத்திய பிச்சை என்ற வார்த்தை ஒரு இயக்கத்தின் கருத்து அன்று.  அவர் பேசியதற்கு அவர் மேல் வழக்கு தொடுத்துள்ளார்கள். அவர் அதனை எதிர்கொள்வார். எனவே, அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காமல் வரலாறும் தற்போதைய நிலையும் என்ன என்று பேசலாம். பட்டியல் இனத்தவர் மேம்பாடு பற்றிப் பேசும் போது மிகக் கவனமாக வார்த்தைகளைத் தேடித் தேடிப் பேசுகிறேன். ஆனால், OBC மக்கள் பற்றிப் பேசும் போது அவர்கள் மானத்தை வாங்குவது போல் கேள்வி கேட்டுள்ளேன் . வேண்டுமானால் சொல்லுங்கள். இணைப்புகளைத் தருகிறேன்.
சூத்திர மக்களைப் பெரியார் திட்டாத திட்டு இல்லை. அது புத்தி வர வேண்டும் என்ற உரிமையில் திட்டுவது. 5 //இந்த 50% சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு பதில் ஆதிகவாதிகளை அதிகார ஆதிக்கவாதிகளாக மாற்றியிருக்கிறது என்று யுகிக்கிறேன்.என் யுகம் தவறான ஒன்றாகவும் இருக்கலாம்.// நீங்களே சொல்லி விட்டீர்கள் ஊகம் என்று. உங்கள் ஊகம் தவறு. 50% BC+MBC இட ஒதுக்கீடு இல்லாத மற்ற மாநிலங்களில் பட்டியல் இனத்தவர் நிலை  என்ன என்று ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை புரியும்.

Gopinath Kubendran : டாக்டர், OBC பிரிவினரில் 80%க்கு மேல் இடஒதுக்கீடு பற்றிய புரிதல் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இடஒதுகீட்டு சலுகை முழுவதும் தலித்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்ற புரிதலிலேயே இருக்கிறார்கள். இந்த காழ்ப்புணர்வுதான் தலித்கள் மீதான பிற சாதியினரின் வன்மம் நீடிக்க முக்கிய காரணம். எனவே OBC பிரிவினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இடஒதுகீட்டை பற்றிய பதிவுகளும், பிரசாரங்கள் மட்டுமே மிக அதிகமாக இருக்க வேண்டும். மாறாக மற்ற அனைத்து சாதியினரையும் விட இடஒதுகீட்டு பற்றிய புரிதல் கொண்ட தலித்களுக்கு செய்த இடஒதுக்கிட்டையை பெரியதாய், பிரசாரமாய் தொடர்ந்து நிகழ்த்துவது சமூகநீதிக்கு எதிரானது. இடஒதுகீடு தந்த கலைஞருக்கு கோவில்கட்டியவர்கள் அருந்ததியர்கள்..

அருந்ததியருக்கு இடஒதுகீட்டு தந்த கலைஞருக்கு விருது வழங்கியவர், ஓபிசி இடஒதுக்கீடு விலக்கை எதிர்த்தும், மீண்டும் அதனை வழங்க கோரியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன்முதலில் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தது, வன்னியருக்கான உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை ஆதரித்து அதற்கு காரணம் கலைஞர் என்று பிரசாரம் செய்தவர் திருமா. பட்டியலின விலக்கு பேசும் கிருஷ்ணசாமிக்கு எதிரான நிலைபாடை எதிர்த்து இடஒதுகீட்டு உரிமை தொடரவேண்டும் என்று பெரும்பான்மையாக முடிவெடுத்திருப்பது பள்ளர் இன மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக