செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

ஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு சமுகவலையில் எழுந்த .. காரசார விவாதங்கள் ... தொகுப்பு

ராஜா ஜி : என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறுவதே ஆகும். - ஆர். எஸ். பாரதி எம்.பி. அமைப்புச் செயலாளர், திமுக
Don Ashok : · இதுல ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தலித்துகள் என சொல்லிக்கொள்வோருக்கும் ஜாதி வெறி பீறிட்டு வரும். வர்ணாசிரம தர்மத்தின் டிசைன் அப்படி.!
Gokul Narayan : ஒரு மோசமான கருத்துக்கு எதிர்வினை இப்படித்தான் இருக்கவேண்டுமா? திமுக தரப்பிலிருந்து யாராவது அப்பட்டமாக நியாயப்படுத்தியிருக்கிறார்களா? அப்படி இல்லாமலிருந்தும் காலகாலமாக கருணாநிதியின் தனிப்பட்ட சிறுபான்மையின ஜாதியின் மீது மட்டும் பேய் இறங்கியதுபோல ஆவேசமாக தாக்குவது எப்படிமுடிகிறது?
ஆர்.எஸ்.பாரதி செயலை கண்டிக்கும் அதேநேரத்தில் இந்தமாதிரியான லும்பன்களை ஆதரித்துவிடாதீர்கள். அது அவர் பேசியதைக்காட்டிலும் அருவருப்பானது.
பதிவுக்கு சொந்தக்காரர் கவனத்துடனே கருணாநிதியின் மேல் வைக்கப்படும் இன்னொரு கேவலமான நாவிதர் வசைமொழியை எடுத்தாளாமல் விட்டுள்ளார்.
அது சமுநீதியின் கண்ணோட்டமல்ல ஒருவித பயம். அந்த கவனமின்றி பொருப்பில்லாமல் தவறாக பேசியதற்க்கு ஆர்.எஸ்.பாரதி ஊடகங்களில் வருத்தம் தெரிவித்தபின்னரும் இவர்களுக்கு கருணாநிதி ஜாதியை தெருவுக்கு இழுப்பதில் தான் ஆசுவாசம் கொள்கிறார்கள் எனில் மாறவேண்டியது ஆர்.எஸ்.பாரதி மட்டுமல்ல.
Adv Manoj Liyonzon : · ஊர் ஊராக தவில் அடித்துக் கொண்டும், நாதஸ்வரம் ஊதிக் கொண்டும், கோயிலில் தேவதாசியாக இருந்தும் வந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக முடிந்ததும், அவரது குடும்பமும் அரசியல் பதவிகளை வகிக்க முடிகிறது என்றால், அது தந்தை அம்பேத்கர் போட்ட "பிச்சை" என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாளல்ல. அது தந்தை அம்பேத்கர் வரையறுத்த இந்திய அரசியலமைப்பு மூலம் நமக்கு நாமே வழங்கிக் கொண்ட உரிமை ஆகும் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களே.
Karthick M : திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியது சாதி வெறி மிக்க வன்மம் மிக்க கருத்து என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் இதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் Adv Manoj Liyonzon அவர்கள் சர்காஸ்டிக்கா பேசிய இப்பதிவும் சாதிய வன்மம் மிக்க பதிவே! பதிலுக்கு ஆர்எஸ் பாரதி அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தால் கூட பிரச்சனை இல்லை அவர் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டு விட்டார். ஆனாலும் விமர்சிக்கலாம் I. can not agree with u! கலைஞரை சாதிய ரீதியில் மறைமுக நகைச்சுவையாக விமர்சித்த இப்பதிவின் நோக்கம் என்ன? ??? சில காலம் முன்னர் வைகோ விமர்சித்த அதே தொனி இப்பதிவில் தெரிகிறது.


Adv Manoj Liyonzon : தவறு. மிக நிச்சயமாக கருணாநிதி அவர்களை சாதி ரீதியாக இழிவு படுத்தவேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. அந்த இழி செயலை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். ஒருவரது சாதி எந்த எவ்வகையில் ஒடுக்கப்பட்டது என்பதை சொல்ல விளைந்திருக்கிறேன். அது எப்படி அவரை இகழ்வதாகும்!?. தலித்துகள் சாதி ரீதியாக எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளேன் உண்மை வெளிச்சம் பெற. அது எப்படி தலித்துகளை இகழ்வதாகும்!?... மேலும் கருணாநிதி அவர்களின் சமூகத்தை சுட்டி காட்ட காரணம் ஆர்எஸ்.பாரதி சொன்ன "பிச்சை" என்ற வார்த்தை. மேலும் இந்த பதிவில் எந்த நகைச்சுவையும் நையாண்டித்தனமும் நான் செய்யவில்லை.

 Karthick M : ஆர் எஸ் பாரதி சொன்ன பிச்சை என்கிற காரணத்தை விமர்சிக்க ஆயிரம் எதிர்விமர்சனங்களை வைக்கலாம் கலைஞரின் முன்னோரின் தொழிலை சுட்டி காட்ட வேண்டியதன் அவசியம் என்ன?? நீங்கள் சமாளிக்காதீர்கள்! Karthick M என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது திமுக உறுப்பினர் அட்டை கொண்ட திமுக பிரமுகர்கள் திமுக கட்சியில் உயர் பதவியில் இருக்கும் ஆட்கள் எல்லாம் தவறு செய்தால் நேரடியாய் கலைஞரின் குடும்பத்தினர் தொழிலை சுட்டி காட்டி விமர்சித்து புத்தி புகட்ட விரும்புவதன்  தொனியே சாதிய வெறிதான் டாட் இதுவே உங்கள் மீதான என் விமர்சனம்

Kathir RS : எல்லா கொண்டையும் விசிபில் மோட்ல வந்துருச்சு இன்னிக்கு..
ஆர்எஸ்பாரதி அவர்கள் பேசியது தவறு தான்.
ஒரு திமுககாரனாக இதற்கு முட்டு கொடுக்க முடியாமல் இதைச் சொல்லவில்லை.முட்டு கொடுக்க வேண்டிய தேவையை ஆர்எஸ் பாரதி அவர்கள் உருவாக்கவில்லை.
தானே முன்வந்து வருத்தம் தெரிவித்துவிட்டார்.

இந்த ஒரு தவறினால் அவர் மீது நாங்கள் வைத்திருக்கும் மரியாதையை ஒரு போதும் குறைந்து விடப் போவதில்லை.
காரணம் திமுகவில் நாங்கள் யாருக்கும் புனிதர் பட்டம் கொடுப்பதில்லை.
சக மனிதர்களாகவே எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே பார்க்கிறோம்..மதிக்கிறோம்..
சரி..அவர் தவறாக பேசிவிட்டார் என்பதற்காக அவரை சிலர் திட்டுவதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது.
அது கூட அவர் வருத்தம் தெரிவித்த பிறகும் தொடர்கிறது.
சோசியல் மீடியாவில் இந்த அலை ஓய கொஞ்ச காலமாகுமென்றே வைத்துக்கொள்வோம்.
பிரச்சனையில்லை அதுவல்ல...
இதில் கலைஞரின் ஜாதிபற்றியும் அவரின் தாயாரைப் பற்றியும் வழக்கமாக சங்கிகள் பேசும் அத்தனை வசவுகளையும் சிலர் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆக உங்கள் ஆழ்மனதில் தேவதாசிமுறையில் பாதிக்கப்பட்ட அல்லது அவர்கள் வழி வந்த பெண்களே கூட இழிவானவர்கள் என்ற எண்ணமே இருக்கிறது.
அப்படி ஒரு வேளை அவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் பரம்பரை பரம்பரையாக எத்தனை தலைமுறையானாலும் அந்த இழிவை எதிர்கொள்ள வேண்டும் என்பதும்..உங்களுக்கு திமுக மீது கோபம் வரும் போதெல்லாம்..இந்த அற்பத்தனத்தை ஆயுதமாக்கி கலைஞரை தாக்குவீர்கள் என்பதும் நன்றாகப் புரிகிறது.
இந்த இழி செயலை முன் வைத்துப் பார்த்தால் ஆர்எஸ் பாரதி பேசியது அத்தனை மோசமில்லை.
தொடர்ந்து குரலெழுப்புங்கள்..
அப்போதுதான் உங்கள் சிந்தனை எத்தனை உயர்வானது என்று உலகத்திற்கு தெரியும்.
சூரியனை பார்த்து நன்றியற்ற நாய்கள் காலங்காலமாக குரைத்தபடியேதான் இருக்கின்றன.குரைக்கட்டும்..குரைக்கட்டும்..
Kanimozhi MV : · சொற்களுக்கு நடுவே , காணொலிகளுக்கு நடுவே இருக்கும் சொற்களை பிடித்துக்கொண்டு தொங்குவது இரண்டு பிரிவினர் ஒன்று தலித் இண்டலெக்‌ஷுவல்ஸ் மற்றொன்று தமிழ்த்தேசியவியாதிகள் இவர்களுக்கு பதில் சொன்னா ஒருவன் நீ வந்தேறி என்பான் இன்னொருவன் ஆதிக்க ஜாதி வெறியன் என்பான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக