புதன், 5 பிப்ரவரி, 2020

பிகில் ரெய்டும் மாஸ்டர் பிளானும்:நெய்வேலி டூ சென்னை!

பிகில் ரெய்டும் மாஸ்டர் பிளானும்:நெய்வேலி டூ சென்னை!மின்னம்பலம் : வருமான வரித் துறையினரின் சோதனைகள் மிக சாதாரணமாகவே இன்று(05.02.2020) காலை தொடங்கியது. ஆனால், நேரம் ஓட ஓட அவர்களது வேகமும் அதிகரித்தது. கிட்டத்தட்ட சினிமாவில் நடப்பது போன்றே இன்றைய ரைடுகளையும் நடத்தி முடித்துவிட்டு, விஜய் வீட்டிலிருந்து கிளம்பியிருக்கின்றனர் வருமான வரித்துறையினர்.
சினிமா ஃபைனான்சியரான அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடங்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு, அங்கிருந்து அப்படியே ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினரின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டது. அன்புச்செழியனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு அதிக பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதை அறிந்ததனால் இந்த ரெய்டுகள் நடைபெறுவதாக அறிந்ததால், அடுத்து யார்? என்று பார்ப்பதற்கு பரபரப்பாக தயாரானது கோலிவுட். சென்னையில் இருப்பவர்களில் யார் வீட்டுக்கு ரெய்டு என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோதே, நெய்வேலியில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்தது மெசேஜ்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த பிகில் திரைப்படத்தின் அத்தனை ஆவணங்களையும் அங்கிருந்து கைப்பற்றியிருக்கின்றனர். அத்துடன், படத்துக்காக செலவு செய்யப்பட்ட பணம், சம்பளமாக கொடுக்கப்பட்ட பணம், அது எப்படியெல்லாம் கொடுக்கப்பட்டது என்ற அத்தனைத் தகவல்களையும் சென்னையில் சேகரித்துக்கொண்டிருந்தபோதே, நெய்வேலியில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு ஒரு டீம் பறந்தது. அங்கு விஜய்யுடன் பேச முற்பட்டு முடியாமல் போனதால், சம்மன் ஒன்றை தயார் செய்து விஜய்யை சந்தித்துப் பேசினார்கள். அங்கேயே, பிகில் படம் குறித்த அத்தனை தகவல்களையும் விஜய்யின் வாய்வழியாகப் பெற்று கையெழுத்தும் வாங்கிக்கொண்டனர். அங்கிருந்து விஜய்யை அழைத்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்பியது வருமான வரித்துறையினர் டீம். இதனால் மாஸ்டர் பட ஷூட்டிங் தடைபட்டு நின்றது.
விஜய் சென்னைக்கு வந்து சேர்ந்தபோது, சென்னையிலுள்ள சாலிக்கிராமம், திருவான்மியூர், கானத்தூர் ஆகிய இடங்களிலுள்ள விஜய்யின் வீடுகளில் சோதனைகளை தீவிரப்படுத்தியிருந்தனர் வருமான வரித்துறையினர். வீட்டுக்கு அழைத்து வந்தபிறகு அதிக கெடுபிடி இல்லாமல் சில ஆவணங்களைக் காட்டி அதன் விளக்கங்களைக் கேட்டிருக்கின்றனர். அதேபோல, மாஸ்டர் படத்துக்காக சேவியர் பிரிட்டோவுக்கு கொஞ்சம் பணத்தை விஜய் கொடுத்திருக்கிறார் அதைப்பற்றிய தகவல்களையும் கேட்டறிந்துவிட்டு ரெய்டினை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டது வருமான வரித்துறையினரின் டீம். எதைத்தேடி வருமான வரித்துறையினர் வந்தனர்? வந்த நோக்கம் நிறைவடைந்ததா? என்பது குறித்து விஜய் தரப்பிலும், வருமான வரித்துறை வட்டாரத்திலும் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன.
ரெய்டு முடிந்து வருமான வரித்துறையினர் சென்றதும், ஒவ்வொரு இடங்களுக்கும் ஃபோன் செய்து என்ன நடந்தது என்று விஜய் கேட்டறிந்திருக்கிறார். முக்கியமாக, என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகள் யாரைக் குறி வைத்து ரெய்டினை நகர்த்தியது என்று கேட்டறிந்தார். அடுத்ததாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார். அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, இன்றைய ஷூட்டிங்கின் இழப்பு எவ்வளவு என்பதையும் விசாரித்திருக்கிறார். இந்த நேரத்தில் அதுபற்றி ஏன் கேட்கவேண்டும் என விசாரித்தபோது முழு ரெய்டின் பின்னணியிலும், அதிகார மையம் நினைத்தால் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தமுடியும் என்பதை உணர்த்தவே இவ்வளவும் நடைபெற்றிருக்கிறது என்கின்றனர்.
rder: none; display: block; height: 188px; margin: 0; padding: 0; position: relative; visibility: visible; width: 752px;"> நெய்வேலி டூ சென்னை காரில் வரும்போதே பலவாறு விஜய்யை பயமுறுத்தியிருக்கிறார்கள். ஃபோனில் பேசுவது போல, அவர் என்ன சொன்னார் இவர் என்ன சொன்னார் என பலவிதமான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், கடைசிவரை ஆவணங்களில் என்ன இருக்கிறதோ அதிலிருந்து சிறிதும் மாற்றமில்லாமல் பேசியிருக்கிறார் விஜய்.
வருமான வரித்துறையினர் தரப்பில் விசாரித்தபோது ‘கிடைத்த ஆவணங்களின்படி நேர்மையான முறையில் ரெய்டினை நடத்தி முடித்திருக்கிறார்களே தவிர, இதில் யாருடைய அரசியல் தலையீடும் இல்லை. மாஸ்டர் படத்தின் தயாரிப்பு செலவுகள் விஜய் பணத்தில் நடப்பதாக ஒரு தகவலும் கிடைத்திருப்பதாலும், அவருடைய இப்போதைய சொத்து விவரங்கள் அனைத்தும் கணக்கிடப்பட்டிருக்கின்றன. மாஸ்டர் படத்துக்குப் பிறகு சந்தேகத்திற்குரிய வகையில் இவை உயர்ந்தால் இந்த தகவல்கள் அப்போது உதவும் என்பதால் முழு அளவில் ரெய்டு நடத்தப்பட்டது” என்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக