சனி, 15 பிப்ரவரி, 2020

தர்பார் பட விநியோகஸ்தர்களை காணவில்லை?.. வருமான வரித்துறை மிரட்டல்?


வெப்துனியா : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தால் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்றும் ரஜினிகாந்த் அதற்காக நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் ஒரு சில வினியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் இயக்குனர் முருகதாஸ் போராட்டம் நடத்துபவர்களிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
;இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் போராட்டம் நடத்திய விநியோகிஸ்தர்கள் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை வரும் என்றும் அப்போது தர்பார் படத்தின் உண்மையான வசூல் தொகையை அவர்கள் கணக்கில் காட்ட வேண்டிய நிலை வரும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் போராட்டம் செய்த வினியோகஸ்தர்கள் கப்சிப் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது
உண்மையில் ’தர்பார்’ படம் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்து இருந்தால் அவர்கள் இந்த நஷ்ட கணக்கை பத்திரிகைகளில் போட்டு வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார்கள் என்றும் ஆனால் பொய்யாக நஷ்டக்கணக்கு காட்டுவதால் தான் தற்போது ஓடி ஒளிந்து இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் இந்த இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் தாங்கள் நஷ்டயீடு கேட்பதை விட்டு விடுகிறோம் என்றும் சமாதான பேச்சு வார்த்தையும் ஒருபக்கம் நடந்து வருவதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக