ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

மோடி டிரம்ப் ஒப்பந்தம் - இந்திய விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் கோழி பால் அமெரிக்க இறக்குமதி..

வளன்பிச்சைவளன் : இந்திய விவசாயிகளின் வருமானத்தில் ஒரு நிரந்தர இடம் பிடித்துள்ளது பால் உற்பத்தி. ஒவ்வொரு சிறு, குறு விவசாயியும் ஒரிரு பால் மாடுகளை வளர்த்து அந்த வருமானத்திலே தங்கள் குடும்ப செலவினங்களை சமாளித்து வருகின்றனர்.
டிரம்பின் இந்திய வருகை இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க இருக்கின்றது. இறக்குமதி பாலுக்கு இருக்கும் வரிவிகிதம் பெருமளவில் குறைக்கப் பட இருக்கின்றது, வெறும் 5%வரி மட்டுமே இதன் மூலம் பால் விலை வீழ்ச்சி ஏற்படும். பாலை விவசாயிகள் உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவர். இதனால் விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும் இது அவர்கள் வாழ இயலாத சூழலை உருவாக்கி விவசாயத்தை விட்டு வெளியேறும் சூழலை உருவாக்கும். நகர்புறங்களில் வந்து குவிய வழி வகுக்கும். தங்கள் ஜீவாதாரத்தை நடத்த குறைந்த கூலிக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் நவீன பண்ணை அடிமைகள் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஒரிரு ஆண்டுகளில் கிடைக்க வழிவகை செய்ய போகிறது இவர்கள் ஒப்பந்தம்.
கறிக்கோழி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப் படும் தற்போது உள்ள 100%வரியை 25 %ஆக குறைக்க இந்திய அரசு இசைந்து இருப்பதாகவும் அதை 10 %ஆக குறைக்க அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முயன்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

எதுஎப்படியாயினும் டிரம்ப் வருகை இந்திய விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து கார்பரேட் நிறுவனங்களுக்கு நவீன அடிமைகளை உருவாக்கும் என்பது மட்டும் புலனாகிறது.
இதுதான் தேசபக்தர்களின் ஆட்சி முறை.
வாழ்க ஆதரித்த மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக