வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

சீனர்கள் ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்குகிறார்கள் .. கொரோன வைரஸ் பாதுகாப்பு ...

Theneeweb : பெய்ஜிங்: சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒட்டு மொத்த மக்களும், தங்களது தேவைகளை இன்டர்நெட் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சீன அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து, தங்களது உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை சீன மக்கள் அனைவரும் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கினால், வீடுகளுக்கேக் கொண்டு வந்து கொடுக்கும் வசதியை பெரிதும் நம்பியுள்ளனர்.
இது பற்றி சீனப் பெண் வாங் கூறுகையில், அவர்களது சேவை இல்லாவிட்டால் எங்களால் இவ்வளவு எளிதாக வாழ்ந்திருக்கவே முடியாது என்கிறார்.

இணையதள நிறுவனங்களும், தங்களது ஊழியர்களுக்கு பாதுகாப்பான கவசங்களையும், முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. எந்த ஊழியரும், நேரடியாக பொதுமக்களிடம் பொருட்களை சேர்க்காமல், அந்தந்த வீடுகளில் இருக்கும் பொதுவான இடங்களில் பொருட்களை வைத்துவிடுவதும், அதனை அந்த வீட்டில் இருப்போர் எடுத்துக் கொள்ளுவதும் பாதுகாப்பு வழிமுறையாகக் கையாளப்பட்டு வருகிறது.
இ-காமர்ஸ் எனப்படும் இணைய வர்த்தகம் இல்லாவிட்டால், சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸால் இன்னும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் பொதுமக்கள் கருதுகிறார்கள்.
கரோனா பரவல் அதிகமாக இருக்கும் நகரங்களில், ஒரு வீட்டில் இருந்து ஒரே வருவர் மட்டுமே ஒரு நாளைக்கு வெளியே வர நகர நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
அரிசி முதல் பழங்கள் வரை அனைத்தையும் பொதுமக்கள் இணைய வர்த்தகம் மூலமே வாங்கிக் கொள்கிறார்கள். அனைத்து பார்சல்களும், தொற்றுக் கிருமி இல்லாத வகையில் ஸ்ப்ரே செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இதனால் ஒரு நாளைக்கு ஒரு ஊழியர், 150 முதல் 190 பார்சல்களை விநியோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைக்கு இணைய வர்த்தக ஊழியர்களின் கடும் உழைப்பே, சீனாவில் இருக்கும் ஏராளமான மக்களை வாழ வைக்கிறது என்று சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக