செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

தில்லி கலவர நிலைமை ஆபத்தான கட்டத்தில் ;;; ஆர் எஸ் எஸ் குண்டர்கள் கைகளில் துப்பாக்கிகள்

தில்லியில் நிலைமை மோசம் என்று தகவல்கள் வருகிறதே என்னவாயிற்று என்று இன்பாக்சில் ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன.
ஷாஹீன்பாக் பகுதியில் பல நாட்களாக அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது பிரச்சினை ஏற்பட்டிருப்பது யமுனைக்கு அப்பால் வடகிழக்கு தில்லிப் பகுதியில். இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் அடரத்தியாக உள்ளன.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக அங்கும் பெண்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரையிலும் அமைதியான போராட்டமாகவே நடந்து வந்திருக்கிறது.
அவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள் பாஜகவினர். இதைத்தூண்டி விட்டவர் பாஜவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா. சிஏஏ ஆதரவுப் போராட்டம் என்ற பெயரில் ஊர்வலம் நடத்தி, சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் திட்டமிட்டு டிராக்டர்களில் கற்களைக் கொண்டு வந்து இறக்கி வைத்த வீடியோக்களும் வெளிவந்துள்ளன. சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களை விரட்டியடித்து அதை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், நாங்களே அதைச் செய்வோம், டிரம்ப் போகட்டும் என்றுதான் விட்டுவைத்திருக்கிறோம் என்று பகிரங்கமாக போலீசுக்கு மிரட்டல் விட்டிருக்கிறார் கபில் மிஸ்ரா.

பாஜக பலத்த அடி வாங்கிய தில்லி தேர்தலில் தோல்வி கண்டவர்களில் இவரும் ஒருவர். தில்லி தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த அடிக்கு பழிவாங்குவதும் ஒரு நோக்கமாக இருக்கலாம்.
தில்லி போலீஸ் வழக்கம்போல பாஜகவினருக்கு ஆதரவாக, கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அவர்கள் கல்வீச்சு நடத்தியதால் சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களும் திருப்பி கல்வீசியிருக்கிறார்கள். இப்போது “இருதரப்பும் மோதிக்கொண்டதாக” செய்திகள் வெளியிடப்படுகின்றன.
பொதுமக்களில் ஒருவரும் காவலர்களில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லா ஊடகங்களும் டிரம்ப்பின் பின்னால் இருப்பதால் செய்தி ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் இப்போதுதான் மெதுவாக வந்து கொண்டிருக்கின்றன. அதுவும்கூட சமூக ஊடகங்களில் வெளிவந்த காரணத்தால்தான்.
நிலைமை வருத்தம் தருவதாக கேஜ்ரிவால் அறிக்கை விட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று கவர்னர் சொல்கிறார்!
முஸ்லிம்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படுவதும், அடையாளம் கண்டு தாக்குவதும் பாஜக ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு பழகிப்போன விஷயம்.
நிலைமையைப் பார்த்தால், பழைய தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்துகள் இருப்பதாகவே தெரிகிறது. காவல்துறை மனச்சாட்சிப்படி செயல்பட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.  ... 
  பரிமேல் அழகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக