ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

புதிரை வண்ணார் மக்கள் தாக்கப்படுவது பெரும்பாலும் பட்டியல் இன .....

பூர்வீக தமிழர் எழுச்சி இயக்கம் : காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!! புதிரை வண்ணார் மக்களை ஆதிக்க மனம் படைத்த சாதி வெறியர்கள் பட்டியல் இன மக்களிடம் இருந்து காப்பாத்துங்க....
என் பெயர் கருப்பசாமி ஊர் வடக்கு  கடாரபுரம், ஆலங்குளம் தாலுகா என்னோட பையன் குமாரு ரேசன் அரிசி வாங்க போனான் அப்போ எங்க ஊர் பள்ளர் சமுகத்தை சார்ந்த நபர் ஏல குமாரு எங்க வீட்டில இந்த அரிசிய குடுத்துரு என்று கூறியிருக்கிறார் அதற்க்கு என்னோட பையன் எனக்கே ரொம்ப வெயிட்னா நான் எப்படி கொண்டு போக முடியும்னு சொல்லி இருக்கிறான் அதற்க்கு போதையில் இருந்த அந்த சாதி வெறி பிடித்த அந் நபர் தூக்கி தூக்கி போட்டு வண்ண பயல உனக்கு இவளவு திமிரா என்று கேட்டு கேட்டு அடித்திருக்கிறார் 
இதை கேள்விபட்ட நான் அப்பா என்ற முறையில் கேட்டதற்க்கு பு மகனே வண்ணாபயல என்று கூறி உன்னால் செய்ய முடிந்தை செய்துக்கோ என்று மிக வண்மையாக திட்டினார் 
உடனே நான் என்னுடைய பையனை அழைத்துக்கொண்டு காவல் துறையில் கம்பேலைன்ட் கொடுத்தன் காவல் துறை ஆய்வாளர் அய்யா அந் நபரை கூப்பிட்டார் 

அதற்க்குள் அந் நபர் அருகில் உள்ள கோனார் தேவர் சமுக அய்யாக்களை அழைத்து வந்து பேசி என்னை மறைமுகமாக மிறட்டி வழக்கை வாபஸ் செய்ய வைத்தார் நானும் பயந்து வழக்கை வாபஸ் பெற்றேன் 
நாங்கள் என்னங்க செய்ய முடியும் வெறும் 4 வீட்ட வச்சிகிட்டு என்று கூறி புளம்பிங்கொண்டே முடித்தார்....
PCR வழக்கு PCR வழக்குனு சொல்லுராங்க அதனால் புதிரை வண்ணார் மக்களுக்கு என்ன பயன்?
 பெரும்பாலும் புதிரை வண்ணார் மக்கள் தாக்கபடுவது பட்டியல் சமுகத்திற்க்குள் ஆதிக்க சமுகமான பள்ளர் மற்றும் பறையார் சமுக சாதி வெறியர்களால் தான்.....
தமிழக  அரசே! தமிழக அரசே! வன் கொடுமை சட்டத்தை ரத்து செய் அல்லது மாற்றம் செய்து புதிரை  #வண்ணார் மக்களை காக்கும் வண்ணம் திருத்தம் செய்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக