புதன், 26 பிப்ரவரி, 2020

திமுக காரர்கள் சாதி பார்ப்பது இல்லை..? .

Ravishankar Ayyakkannu : திமுகவில் யார் என்ன சாதி என்று திமுகவினருக்கே தெரியாது என்றேன்.
சிரித்தார்கள்.
மிசா கொடுமையில் இருந்து திமுக தலைவரைக் காத்து உயிர் நீத்த சிட்டிபாபு MP என்ன சாதி என்று கேட்டேன்.
99% திமுகவினருக்கு அவர் என்ன சாதி என்று தெரியவில்லை.
நீங்கள் 1949 தொடங்கி 1980கள் வரை வாழ்ந்து மறைந்த திமுக மூத்த தலைவர்கள் யார் பெயரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.
அவர்கள் சாதி திமுகவினருக்குத் தெரியாது.
சாதியைத் தெரிந்து கொள்ளக்கூட அவர்கள் முற்படுவதில்லை.
திமுகவினருக்கு ஒரு தலைவர் திமுக காரர் என்பதே அவரைக் கொண்டாடப் போதுமான ஒரு காரணம் ஆகும்.
இன்றைய வாக்கரசியலில் சாதியின் பங்கு என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.
பட்டியல் வகுப்பினருக்குக் கட்சிப் பொறுப்புகளில் இட ஒதுக்கீடு தரும் கட்சி திமுக.
ஒரு ஊரில் சாதி, மதம் என்ன என்று அறிந்திருப்பது அவர்களின் பிரச்சினையைப் புரிந்து கொள்ளத் தேவைப்படும் அடிப்படை அரசியல் அறிவு.
பலர் ஒரே பதவிக்குப் போட்டியிடும் போது சாதியும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனவே, உள்ளூர் அளவில் கட்சிக்காரர்களுக்கு எல்லோரின் சாதியும் தெரியும் என்பது தெரியாத அளவுக்கு நான் அப்பாவி இல்லை.

ஆனால், போட்டி இல்லாத இடங்களில், ஒரு மாவட்டத்துதிமுக காரர் இன்னொரு மாவட்டத்து திமுக காரரைப் பார்க்கும் போது, அவரைத் திமுக காரராகத் தான் பார்க்கிறார்.
தலைவர் தளபதியை ஆதரிப்பவர்கள் அவரைத் தலைவர் என்ற காரணத்துக்காகத் தான் ஆதரிக்கிறார்கள்.
அவர் நம்ம சாதி ஆள் என்று ஆதரிப்பதில்லை.
இது வரை நான் என்ன சாதி என்று ஒரு திமுக காரர் கூட என்னிடம் கேட்டது இல்லை.
ஆனால், திமுகவைத் திட்டித் தீர்க்கிறவர்கள் தான்,
நான் என்ன சாதி என்று தெரிந்து கொள்ள துடியாய் துடிக்கிறார்கள்.
திமுக காரர்கள் சாதி பார்ப்பது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக