ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

பாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூறினார்களாம்

tamil.oneindia.com : சென்னை: பாஜகவில் இணைய தம்மிடம் பேசினார்கள்.. நிறைய செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர் என இயக்குநர் பாரதிராஜா பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு பல்வேறு பிரபலங்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது.
திரைத்துறை பிரபலங்களை இழுப்பதை தொடர் நடவடிக்கையாக பாஜக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாரதிராஜா கூறியதாவது: தமிழகத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் கர்நாடகா, கேரளாவில் அந்த மண்ணின் மக்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் நிச்சயம் ஜெயித்துவிடலாம்.;
கை நீட்ட சொல்லும் அரசியல் ஆனால் தமிழர்கள் ஒன்று சேரும் போது யார் தலைவர் என நினைக்கிறார்கள்.. அதேபோல் எல்லோரும் முன்னால் நிற்க வேண்டும் என விரும்புகின்றனர்.
பாதரசம் போல் இருக்கும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதும் கஷ்டமான ஒன்று. நான் இதுவரை அரசியல் கட்சி தொடங்கலாம் என நினைத்தது இல்லை. ஏனெனில் அரசியல் என்றாலே கை நீட்டத்தான் வேண்டும். அதிகாரம், அரசியல் இதுவரை நல்ல கலைஞனாக இருந்துவிட்டேன். போகும் போது நல்ல கலைஞன் போகிறான் என சொல்ல வேண்டும். கரப்டெட் போகிறான் என சொல்லக் கூடாது. அதிகாரங்கள் நம்மை அச்சுறுத்தும் போது நமக்கு இயல்பாகவே கோபம் வரும்.. அதனால்தா ஏன் அந்த அதிகாரத்தைக் கையில் எடுக்கக் கூடாது என சிந்திக்கிறார்கள்.

 என்னைப் பொறுத்தவரை கோழியாகத்தான் இருப்பேன். கோழி கூவத்தான் செய்யும்... குச்சி அடித்து கொத்தி கொத்தி ஒவ்வொருவரையாக வீட்டுக்குள் நுழைந்து எழுப்பாது. அதேபோல் கூரை மேல் நின்று மட்டும் கூவ மட்டும் நான் செய்வேன். அரசியலுக்கு நிச்சயம் வரவேமாட்டேன்.
எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா அனைவருமே என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். ஆனால் அதை ஏற்கவில்லை. ஏன் 6 மாதத்துக்கு முன்னர் கூட மத்தியில் இருந்து பெரிய அளவில் பேசினார்கள். அதை செய்கிறோம்.. இதை செய்து கொடுக்கிறோம் என்றார்கள். எனக்கு இருக்கிற கடன்பிரச்சனைக்கு ரொம்ப பிரமாதம்னுகூட யோசிச்சேன். ஆனால் ஏற்கவில்லை. முடியாது என்று சொன்னேன்.. எழுந்து போய்விட்டார்கள். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக