செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

Anti CAA Protest : களத்தில் நிற்கும் சாமானிய பெண்கள்

tamil.indianexpress.com:  Anti CAA Protest, Chennai live
Chennai Shaheen Bagh protest Live News: சிஏஏ சட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி வரும் 19-ம் தேதி சட்டபேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்தது. இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்- 19 சட்டமன்றம் முற்றுகை! தமிமுன் அன்சாரி அறிவிப்பு
மதுரை மஹபூப்பாளையம் ஜின்னா திடலில் சிஏஏ-என்ஆர்சி-என்.பி.ஆர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நெல்பேட்டையில் மற்றொரு சிஏஏ சட்டத்திற்கு எதிராக தொடர் தர்ணாப் போராட்டம்  தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் சென்னை அடித்து மதுரையில் முக்கியத்துவம் பெறுகிறது என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


சென்னை வண்ணரப் பேட்டையில் நடந்து வரும் ஷாகின் பாக் போராட்டம் ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. சாமானிய பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் அரசியல் களத்தில் அமைதி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பேச்சு, உறுதிமொழி, பாட்டு போன்றவைகள் மூலம் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மிகுந்த கட்டுப்பாட்டுடன் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த போராட்டத்தில் வந்து உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
சென்னை ஷாகின் பாக்: மூத்த பத்திரிக்கையாளர் குமரேசன் கலந்து கொண்டார்
தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் குமரேசன் சென்னை ஷாகின் பாக்கில் கலந்து கொண்டார்.  இந்த போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் , வெற்றி பெற வேண்டும்  என்று என்று கூறினார்.  
உங்களின் ஒருவனாக நிற்கிறேன் - சென்னை ஷாகின் பாக்கில் கலந்து கொண்ட கருணாஸ்
சென்னை வண்ணரப் பேட்டையில் நடந்து வரும் ஷாகின் பாக்கில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ் - ' நான் அரசியல் வாதியாகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ  இங்கு வரவில்லை, ஒரு மனிதனாக உங்களுடன்  நிற்கின்றேன் என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார்.
இந்தியாவின் பன்முகத் தன்மை அடையாளத்தை அழிக்கும்  சட்டத்தை எதிர்ப்பது நியாமான போராட்டம் என்றும், இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள், வரலாறுகளை நீங்கள் மறைக்க முடியாது  என்றும் கூறினார்.   
இலங்கை தமிழர்கள் இரட்டை குடியுரிமை - அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள்  தங்கள் இலங்கை குடியுரிமையை இழந்து இந்திய குடியுரிமை பெறும்போது இலங்கையில் அவர்களுக்கான உரிமை மறுக்கப்படும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை தமிழர்கள் விவகாரத்தை அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் என திமுக அவையை வெளிநடப்பு செய்தது  திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அமைதி போராட்டம்:
சென்னையில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வனுமுரையைக் கண்டித்து திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தொடர்ந்து நான்காவது நாளாக  போராட்டம் நடைபெற்று வருகிறது.  பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை சிஏஏ போராட்டம் : ஏன் மக்கள் போராடுகிராகள்? அடிப்படையில் என்ன பிரச்சனை (4/4)
குடியுரிமை திருத்தச் சட்டம்:   கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்கள் குடியேறிய 5 ஆண்டுகளில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த குடியுரிமை சட்டம் வருவதற்கு முன்பாக, சிறுபான்மையினர் அல்லது அகதிகளுக்கு குடியுரிமை வழங்க (மதத்தின் பெயரால் ) இந்திய குடியுரிமைச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் தான் இந்த குடியுரிமை திருத்தம் சட்டதிற்கு கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக சென்னையில் வண்ணாரப்பேட்டையில் பொது மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.    
சென்னை சிஏஏ போராட்டம் : ஏன் மக்கள் போராடுகிராகள்? அடிப்படையில் என்ன பிரச்சனை (3/3)
அயல் நாட்டினருக்கான குடியுரிமை: குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ், சட்டவிரோதமாக குடியேற்றம் செய்யாத ஒருவர், இந்த முறையின் மூலம்  குடியுரிமை அடையலாம். அந்த நபர்,  இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்வதற்கு முன்பு தொடர்ந்து 12 மாதங்கள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.  கூடுதலாக, இந்த 12 மாதங்களுக்கு முன்பாக, குறைந்தபட்சம் 11 வருடமாவது இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும். ( புதிதாய் வந்த குடியுரிமை திருத்தம் சட்டத்தால் தற்போது இந்த 11 ஆண்டும் ஐந்து ஆண்டுகளாக குறைக்கபட்டுள்ளது)
தள்ளுபடி: மத்திய அரசின் கருத்தில், விண்ணப்பதாரர் பொதுவாக அறிவியல், தத்துவம், கலை, இலக்கியம், உலக அமைதி அல்லது மனித முன்னேற்றம் ஆகியவற்றின் காரணத்திற்காக தனித்துவமான சேவையை வழங்கியிருந்தால், மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து (அல்லது ) ஏதேனும் நிபந்தனைகளைத் தள்ளுபடி செய்யலாம். பாகிஸ்தான் பாடகரான அட்னான் சாமி, தலாய் லாமா போன்றோருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியது இப்படித்தான்.
சென்னை சிஏஏ போராட்டம் : ஏன் மக்கள் போராடுகிராகள்? அடிப்படையில் என்ன பிரச்சனை (2/2)
வம்சாவளியைச் சேர்ந்த குடியுரிமை: இந்திய நாட்டிற்குள் வெளியே பிறந்த ஒரு குழந்தை வம்சாவளிக் குடியுரிமையின் மூலம் இந்தியாவின் குடிமக்களாக ஆகலாம். இருந்தாலும், அந்த குழந்தையின் பெற்றோர் ஒருவர் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும், குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் அந்த நாட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
<பதிவு மூலம் குடியுரிமை
: திருமணம், வம்சாவளி போன்றவைகளின் மூலம் பதிவு செய்து குடியுரிமை அடையலாம். சென்னை சிஏஏ போராட்டம் : ஏன் மக்கள் போராடுகிராகள்? அடிப்படையில் என்ன பிரச்சனை
குடியுரிமைச் சட்டம், 1955 ன் கீழ், குடியுரிமை பெற நான்கு வழிகள் உள்ளன.
பிறப்பால் குடியுரிமை: 1950 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்த எவரும் பிறப்பால் குடிமகனாக கருதப்படுவார்கள் என்று இந்திய குடியுரிமை சட்டம்,1955 கூறுகிறது. பின்பு-  ஜனவரி 1, 1950 முதல் ஜனவரி 1, 1987 க்கு இடையில் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமையை கிடைக்கும் வகையில் இந்த 1955 சட்டம் திருத்தப்பட்டது.
2003ம் ஆண்டுல் இந்த சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. 2003 சட்டத்தின் கீழ், டிசம்பர் 3, 2004க்குப் பிறகு பிறந்த ஒருவர் பிறப்பால் இந்திய குடிமகனாக கருதப்படுவார்கள். இருந்தாலும், 2004 ஆண்டிற்கு பிறகு பிறந்த குழந்தையின் பெற்றோர் ஒருவர் கட்டாயம் இந்திய குடிமகனாகவும், மற்றொருவர் சட்டவிரோதமாக குடியேறாதவராகவும் இருத்தல் வேண்டும் . எனவே, 2004க்குப் பின் இந்தியாவில் பிறந்த ஒரு குழந்தையின் பெற்றோர் சட்டவிரோதமாக குடியேறியவராய் இருந்தால், அக்குழந்தை பிறப்பால் குடிமகனாக முடியாது. சட்டத்தில் குறிப்பிடப்பட்ட, வேறு சில நெறிமுறைகளின் மூலமாகத்தான் குடிமகனாக முடியும்.
குடியுரிமை திருத்தம் சட்டம் : இன்னர் லைன் பெர்மிட் என்றால் என்ன?
குடியுரிமை சட்டம் திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன. ஒன்று இன்னர் லைன் பெர்மிட்   மூலம் பாதுகாக்கப்பட்ட மாநிலங்கள், மற்றொன்று அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகள்.
இன்னர் லைன் பெர்மிட் (ஐ.எல்.பி):  ஒரு மாநிலம் இன்னர் லைன் பெர்மிட் வரையறைக்குள் இயக்குகின்றது என்றால், மற்ற மாநிலத்தை சேர்ந்த மக்கள் அந்த குறிப்பிட்ட மாநிலத்திற்கு செல்லும் போது, நுழைவு அனுமதிப் படிவத்தை வாங்கிய பின்பு தான் நுழைய முடியும். அந்தந்த மாநில அரசாங்கம் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு நுழைவு அனுமதியை வழங்குவர்.
ஆறாவது அட்டவணை:  இந்த மாநிலங்களில் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களை உருவாக்கி, அதற்கு சிறப்பு அதிகாரங்களையும் வழங்குகிறது.தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களின் நோக்கம் பழங்குடி சமூகங்களின் சுயராஜ்யத்தை உயர்த்துவதாகும். இந்த, கவுன்சில் தனக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள், எண்ணற்ற விஷயங்களில் சட்டமியற்றும்  அதிகாரம் கொண்டுள்ளன.
குடியுரிமை திருத்தம் சட்டம்: அசாமில் நுழைவு அனுமதிப் படிவம் கொண்டு வர முடிவு?
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக அசாம்  மாநிலத்தில் கடும் ஆர்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், மத்திய உள்துறை அமைச்சகம்  குழு ஒன்று நியமித்தது.  நுழைவு அனுமதிப் படிவம் (இன்னர் லைன் பெர்மிட் ) முறையை அசாம் மாநிலத்திலும் நடைமுறைபடுத்த  அந்த குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்திற்குள் இந்த அறிக்கை  மத்திய உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    
சென்னை வண்ணாரப்பேட்டை போரட்டத்தை அரசு முறையாக கையாளவில்லை - டிடிவி தினகரன்
சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள் போராட்டத்தை அரசு முறையாக கையாளவில்லை என்பதே உண்மை , வழக்கம்போல பழனிசாமி பொய் சொல்கிறார் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  
சென்னை சிஏஏ போராட்டம்: 1950 ஆம் ஆண்டு நேரு-லியாகத் ஒப்பந்தம் என்றால் என்ன?
இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகள் ஒவ்வொன்றும் அதன் எல்லை முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கு, குடியுரிமையின் முழுமையான சமத்துவத்தை, மதத்தைப் பொருட்படுத்தாமல், வாழ்க்கை, கலாச்சாரம், சொத்து மற்றும் தனிப்பட்ட மரியாதை, இயக்க சுதந்திரம் ஆகியவற்றில் முழு பாதுகாப்பு உணர்வையும் இந்த ஒப்பந்தம் உறுதி செய்கின்றது . ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சட்டம் மற்றும் நெறிகளுக்கு உட்பட்டு தொழில் செய்யும் உரிமை, பேச்சு சுதந்திரம், வழிபாட்டு உரிமை உள்ளது”என்று இந்த ஒப்பந்தத்தின் உரை தொடங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு- குடியுரிமை திருத்த மசோதா விவாதத்தில் குறிப்பிடப்பட்ட 1950 ஆம் ஆண்டு நேரு-லியாகத் ஒப்பந்தம் 
நாளை சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடைபெறுமா?
நாளை  தமிழக சட்டமன்றத்தை அமைதி வழியில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று  மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி  அறிவித்திருந்தார்.  மேலும் சென்னை, காஞ்சி, திருவள்ளுர் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் அன்றைய தினம் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்திய மக்கள் மன்ற தலைவர் வராகி இந்த  சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    
மதுரையில் வலுப்பெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்:
மதுரை மஹபூப்பாளையம் ஜின்னா திடலில் சிஏஏ-என்ஆர்சி-என்.பி.ஆர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நெல்பேட்டையில் மற்றொரு சிஏஏ சட்டத்திற்கு எதிராக தொடர் தர்ணாப் போராட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் சென்னை அடித்து மதுரையில் முக்கியத்துவம் பெறுகிறது என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சிஏஏ விவாதம்:  சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறை தடியடி நடத்தியது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.எந்த விவாதமும் நடத்தாமல், தீர்மானத்தின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததை ஒரு போதும் ஏற்க முடியாது என்று திமுக நேற்று சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக