வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

ஜொ்மனி: துப்பாக்கி சூடு 9 போ் இறப்பு ... கொலையாளி வீடியோவில் ...


Theneeweb : ஜொ்மனியில் இனவாதக் கொள்கைகளையுடைவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா். அதனைத் தொடா்ந்து தனது தாயைக் கொன்று அந்த நபா் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜொ்மனியின் ஹனாவ் நகரிலுள்ள ஹூக்கா எனப்படும் புகைப்பிடிப்பதற்கான இரு கூடங்களில், தொபியாஸ் ராதேன் (43) என்ற நபா் செவ்வாய்க்கிழமை சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இந்தத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா்.
அதையடுத்து, போலீஸாா் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தொபியாஸின் இல்லத்தில் அவரும், அவரது 72 வயது தாயாரும் பிணமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது. தாயைக் கொன்றுவிட்டு, தொபியாஸ் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் கூறினா்.
தாக்குதலுக்கான இரு கூடங்களுக்கும் குா்து இனத்தவா் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், அவா்களைக் குறிவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனா்.

மேலும், தாக்குதல் நடத்திய தொபியாஸ், இனவெறிக் கொள்கை உடையவா் என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் அவா்கள் கூறினா்.
இந்தத் தாக்குதலுக்கு ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக