வியாழன், 6 பிப்ரவரி, 2020

சீனா .. கொரோனா.. 570 பேர் உயிரிழப்பு .. 28000 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 73 பேர் ...


Shyamsundar /tamil.oneindia.com : - பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது 
யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. 
இந்த வைரஸ் காரணமாக எல்லா நோயாளிகளும் வுஹன் நகரத்தில் அடைத்து வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். வுஹன் நகரத்தை விட்டு வைரஸ் வெளியே செல்ல கூடாது என்பதால் நோயாளிகள் எல்லோரையும் அங்கேயே வைத்து சோதனை செய்து வருகிறார்கள். 
வுஹன் நகரத்தில் இதற்காக 6 நாட்களில் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு 2000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இத்தனை செய்தும் இந்த வைரஸ் வெளியே சென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
சீனாவிற்கும் வெளியே அந்நாட்டில் 5 நகரங்கள் இதனால் மூடப்பட்டுள்ளது. மொத்தமும் 22 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு இயற்கை பேரழிவு இயற்கை பேரழிவு நடக்கும் போது என்ன நடக்குமோ அதேபோல்தான் தற்போதும் சீனாவில் நடந்து வருகிறது. 
நோய் பாதிக்கப்பட்ட வுஹன் நகரம் மொத்தமாக நிலைகுலைந்துள்ளது. அங்கு போலீஸ் கூட வெளியே செல்லவில்லை. அங்கு இதனால் பலர் தண்ணீர், உணவு இன்றி கடும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அங்கு நோய் தாக்கும் மக்கள் சாலையில் நடந்து கொண்டு இருக்கும் போதே சுருண்டு விழுகிறார்கள். சாலையிலும், மெட்ரோவில் சுருண்டு விழுந்து இவர்கள் உயிரை விட்டுள்ளனர். 
முக்கியமாக மெட்ரோக்களில் இந்த சம்பவம் அதிகம் நடந்துள்ளது.
 சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 570 ஆகி உயர்ந்துள்ளது. இந்த பிப்ரவரி மாத இறுதியில் பலி எண்ணிக்கை 2500ஐ தாண்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டு மக்களை இது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மொத்தம் 28000 பேர் சீனாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் நேற்று மட்டும் புதிதாக 4 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இனி வெளிநாடுகளுக்கு கொரோனா குறித்த தகவல்களை சீனா அதிகம் தெரிவிக்காது என்றும் கூறுகிறார்கள். இதை அந்நாடு பெரிய தோல்வியாக கருதுவது குறிப்பிடத்தக்கது. Read more at: https://tamil.oneindia.com/news/international/coronavirus-death-toll-in-china-reaches-570-and-73-people-died-in-a-single-day/articlecontent-pf433799-376267.html

Read more at: https://tamil.oneindia.com/news/international/coronavirus-death-toll-in-china-reaches-570-and-73-people-died-in-a-single-day/articlecontent-pf433797-376267.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக