வியாழன், 13 பிப்ரவரி, 2020

இலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள் ராகிங் காரணமாக வெளியேறி உள்ளனர் ..


Kamali Teps : கடந்த இரண்டு வருடங்களில் சுமார் இரண்டாயிரம் மாணவ மாணவிகள் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர்களின் கல்வியை தொடர வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்ததுள்ளது. அப்படியானால் இன்னும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பயம் காரணமாக பல்கலைக பக்கம் போகாமல் இருந்திருப்பார்கள்? எத்தனை ஆயிரம் மாணவர்கள் தங்கள் கல்விக் கனவு மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவமானங்களை சகித்துக் கொண்டு கல்வியை தொடர்ந்திருப்பார்கள்.இந்த முகநூலில் பதிவிறக்கி உள்ள இதற்கு முந்தைய வீடியோ பதிவை பாருங்கள்.
சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால் ஒரு அராஜக சாம்ராஜ்யத்தை இந்த பகிடிவதை மனநோயாளிகள் நடத்துகிறார்கள் என்று புரியும். நாளைக்கு உங்கள் ஊரில் உங்கள் உறவில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படலாம். சக மாணவர்களின் கல்வியை சிதைப்பவர்களை இந்த சமூகம் மெளனத்தின் ஊடாக ஊக்குவிக்க முடியாது.


சமூகத்தின் ஒரு பிரிவினர் தம்மை சட்டத்திற்கு அப்பால் பட்டவர்கள், பெரும் சக்தி படைத்தவர்கள் என்ற மாயையில் வெறித்தனமாடுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. பல்கலைக்கழக மாணவர்கள் சமூக அக்கறை என்ற பெயரில் அரசியல் முகவர்களாக தங்களை முன்னிலைப்படுத்துவதை விடுத்து முதலில் சக மாணவர்களின் கல்வியை சிதைக்காமல் இருக்க வேண்டும். பெற்றவர்களின் மனக்குமுறல் இனி பெரு நெருப்பாய் மாறும்
தங்கள் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக