வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

கொரோனா..வைரஸ் சீனாவில் 1487 பேர் உயிரிழப்பு ... கைமீறி போகிறது?


பலி எண்ணிக்கை
என்ன வேகம் tamil.oneindia.com - shyamsundar : பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலி எண்ணிக்கை 1487 ஆக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டு மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. நோய் தாக்கியவர் தொட்டால் அந்த வைரஸ் இன்னொருவருக்கும் பரவும்.
மத்திய சீனாவில் தோன்றினாலும் தற்போது அந்நாடு முழுக்க இந்த வைரஸ் வேகமாக பரவி விட்டது. அதேபோல் மிக முக்கியமாக சீனாவை போலவே 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.
கொரோனா கோரத் தாண்டவம்.. இந்தியர்கள் பீதியடைய வேண்டாம்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் நம்பிக்கை




என்ன வேகம்

இந்த வைரஸ் காரணமாக எல்லா நோயாளிகளும் வுஹன் நகரத்தில் அடைத்து வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். வுஹன் நகரத்தை விட்டு வைரஸ் வெளியே செல்ல கூடாது என்பதால் நோயாளிகள் எல்லோரையும் அங்கேயே வைத்து சோதனை செய்து வருகிறார்கள். ஆனாலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த சீனா மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டது.



என்ன தோல்வி

என்ன தோல்வி

யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தொடக்கத்தை விட இப்போது இந்த வைரஸ் அதிக வேகத்தில் இருக்கிறது.சார்ஸ் மற்றும் கொரோனா இரண்டும் ஒரே வகை கொரோனா குடும்ப வைரஸ்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவ வௌவால் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.



வேகமாக முந்தியது

வேகமாக முந்தியது

இந்த சார்ஸ் மூலம் மொத்தமாக 5327 பேர் பாதிக்கப்பட்டார்கள். இதன் மூலம் 349 பேர் பலியானார்கள். தற்போது சார்ஸை விட கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் கண்டிப்பாக அடுத்த பிளேக் தாக்குதல் போல மாறலாம் என்று கணிக்கப்படுகிறது. பிளேக் காரணமாக 20 லட்சம் பேர் பலியானார்கள். அதை கட்டுப்படுத்த பல வருடங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 116 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 1487 ஆகி உயர்ந்துள்ளது. இந்த பிப்ரவரி மாத இறுதியில் பலி எண்ணிக்கை 2500ஐ தாண்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டு மக்களை இது அதிர்ச்சி அடைய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக