சனி, 4 ஜனவரி, 2020

ஜெயலலிதா இறப்பு குறித்து OPS இல்லத்தில் பி.எச் .பாண்டியன் கேட்ட அந்த முக்கிய ஐந்து கேள்விகள் ...

Venkat Ramanujam : முன்னாள் அதிமுக சபாநாயகர் பி எச் பாண்டியன் மறைவு செய்தி வந்துள்ளதே..
அன்றைய பாதுகாப்பு மந்திரி நிர்மலா துணையுடன் இந்திய ராணுவத்தின் விமானத்தையே தன் தம்பிக்கு மருத்துவமனை செல்ல வரவழைக்கும் துணை முதல்வர் மற்றும் அதிமுக கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் என்கிற சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் ஒ.பி.எஸ் இல்லத்தில் வைத்து பி எச் பாண்டியன் கேட்ட பல கேள்விகளில் கிழ் காணும் ஐந்து கேள்விகள் ஈரம் மட்டும்மல்ல உரமும் மிக்கவை ..
🦀 கேள்வி 1 : 22 செப்டம்பர் 2016 இல் போயஸ்கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சேவையான 1066க்கு தொடர்பு கொண்டு பேசிய டி.எஸ்.பி யார் ..
🦀 கேள்வி 2 : அப்போலோவில் இருந்து ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு புறப்பட்டு போயஸ்கார்டனுக்கு வந்தது? அதில் இருந்தவர்கள் யார்? முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதலுதவி சிகிச்சைகள் மேற்கொண்டது யார்..
🦀 கேள்வி 3 : போயஸ்கார்டனில் இருந்து ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்ட போது போயஸ்கார்ட்டனில் இருந்த சிசிடிவி கேமராவில் ஏன் காட்சி பதிவாகவில்லை ..

🦀 கேள்வி 4 : அப்போலோவிற்குள் ஜெயலலிதாவை கொண்டு சென்ற ஆன்புலன்ஸ் சிசிடிவி காட்சிகளிலும் இதே போல் நடந்துள்ளனவா? இல்லை என்றால் அந்த காட்சியை காட்ட வேண்டாமா ..
🦀 கேள்வி 5 : அப்போலோவிற்குள் ஜெயலலிதா அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அதே தினத்தில் அங்கிருந்த 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த உத்தரவை பிறப்பித்தது யார் ..
மிக மிக முக்கியமாக உள்துறை பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் Zplus தரும் பாஜக அரசுக்கு தெரியாமல் பூனைப்படை எப்படி அமைதியாக விலக்கப்பட்டது என்ற கேள்விக்கு மோடி அரசால் இன்று வரை பதில் சொல்ல இயலவில்லை..
எல்லா மர்மங்களையும் 'ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்' அமைத்து உண்மையை கண்டுபிடிப்போம் என்று கூறிய ஜெயலலிதா வழியில் செயல்படும் இன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் ..
ஊழலில் 50:50 பங்கு விகிதசாரத்தில் மோடி அமித்ஷா கும்பலிடம் சேறுடன் சேர்ந்த மழை நீர் போல ஒன்றென கலந்து தமிழ்நாட்டை அர் எஸ் எஸ் பயிற்சி கூடமாக்கி நாசமாக்கி வருவது மக்களுக்கு தெரியாமலும் இல்லை ..
அம்மா வழியில் கட்சி நடத்துகிறேன் என்பவர்கள் அவர்களின் அம்மாவின் மர்ம மரணத்தில் மத்திய மோடி அரசின் பங்கை குறித்து ஆராயாமல் .,
தங்கள் அமைத்த விசாரணை ஆனையத்தையும் தாங்களே முடக்கி ., அவருடன் சேர்ந்த #OPS ஒரு முறை கூட நேரில் அஜராகமால் ..
உரமிக்க கேள்விகளை மீடியா முன் விதைத்த பி எச் பாண்டியன் ஆண்டுகள் மூன்று ஓடியும் எந்த ஒரு பதிலையும் கூட பெறாமல் இறக்க நேர்ந்ததை அறிந்து ஒரு உண்மையான அதிமுக தொண்டரின் கோணத்தில் அமர்ந்து எண்ணி பார்த்தால் வருத்தமாக தான் நமக்கும் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக