செவ்வாய், 14 ஜனவரி, 2020

வன்னியர் அறக்கட்டளை யும் அதன் மூலப்பத்திரமும் ...

Kandasamy Mariyappan : திரு. ராமதாசு மற்றும் அவரது மகன் திரு. அன்புமணி எவ்வளவு புத்திசாலிகள்:
3 கிரவுண்ட் இடத்தில் கட்டப்பட்ட முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலம் என்று ஒரு புரளியை கிளப்பி விட்டார்.
அதனைத் தொடர்ந்து,
திமுக தலைவர் திரு.முக.ஸ்டாலின் தனது வலைதள பக்கங்களில் எந்த ஒரு பதிவிட்டாலும், வன்னியர்கள் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து என்ற பதிவாக இருந்தாலும், அவரது பின்னூட்டத்தில் பலர் குறிப்பாக வன்னியர் சமூக மக்கள் "மூலப்பத்திரம் எங்கே தலைவரே " என்று மறக்காமல் பதிவிட்டுக் கொண்டிருந்தனர்.

பாவம், அந்த வன்னியர் சமூக மக்களை திமுகவிற்கு எதிராக களமாட விட்டு,
அந்த வன்னியர் சமூக மக்களின் உழைப்பால், பணத்தால் உருவான அணைத்து சொத்துக்களையும் அப்பன், மகன் பெயருக்கு மாற்றி விட்டார்கள்!
முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்திற்கு மூலப்பத்திரத்தையும் காண்பித்து விட்டார்.
ஒருவேளை, முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலமாகவே இருந்தாலும், அதனை கலைஞர் தன்னுடைய பணத்தை கொடுத்து வாங்கிய இடம்.
ஆனால் வன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் அனைத்தும்....
வன்னியர் சமூக மக்களே,

அது உங்கள் உழைப்பால், உங்கள் பணத்தை கொண்டு உருவாக்கிய சொத்துக்கள். இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்!
இப்பொழுதும் திமுக தலைவரை நோக்கி முரசொலி அலுவலக இடத்தின் மூலப்பத்திரத்தை கேட்க போகிறீர்களா!
அல்லது
உங்கள் சொத்து எங்கே என்று திரு. ராமதாசிடம் கேட்கப் போகிறீர்களா!
தனக்கான அமைப்பு எது என்று சரியாக தேர்வு செய்யாத வரையிலும், இப்படித்தான் ஏமாற்றப் படுவீர்கள்.
தனக்கான அமைப்பை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று, நீங்கள் இப்பொழுது பல்லக்கு தூக்கும் பார்ப்பனர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக