வெள்ளி, 17 ஜனவரி, 2020

ரஜினிகாந்த் வீட்டுக்கு வருமான வரித்துறை ஒருபோதும் .... ஏன்?

சையத் சுபஹான் : ஆகச் சிறந்த காரியக் குடிகாரன்....
முத்து, படையப்பா எல்லாம் வெற்றியாக இருக்கலாம், ஆனால் கே.எஸ்
ரவிக்குமார் உடைய இரண்டு படங்கள் தோல்வியாகிய பிறகு அவருக்கு ரஜினி வாய்ப்பே வழங்கவில்லை,
சந்திரமுகி வெற்றியாக்கிய பி. வாசு விற்கு குசேலன் தோல்விக்கு பிறகு ரஜினி வாய்ப்பு வழங்கவில்லை,
இன்று வரை தன்னுடைய TITLE CARD யின் பின்னால் வரக்கூடிய இசையை வடிவமைத்த தேவா விற்கு, திரைத்துறையில் இன்று வரை உச்சத்தில் இருக்கும் ரஜினி ஏதும் மறுவாய்ப்பு கிடைக்க உதவினாரா என்று தெரியவில்லை,
கபாலி வெற்றிக்கு பிறகு ரஜினி தொடர்ந்து ரஞ்சித்துக்கு வாய்ப்பு கொடுத்தால் கூட சாமர்த்தியமாக கலைப்புலி தாணுவை கழட்டிவிட்டவர், வசூல் கொடுத்து பெயர் பெற்ற கபாலி திரைப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் என்று அதே கூட்டணியில் மற்றுமொரு வெற்றியை சுவைக்க எண்ணிய ரஜினிகாந்த் பணத்தை மட்டும் வேறுஒருவருக்கு தர மனமில்லாமல் கபாலி தயாரிப்பாளர் தாணுவை கழட்டி விட்டு தன்னுடைய மருமகனை தயாரிப்பாளராக ஆக்கியவர்.
மேலே குறிப்பிட்ட நபர்களை போல தான் ரஜினிகாந்த்தின் ரசிகர்களும் அவருக்குள் அடங்குவர்..
ரஜினிகாந்த் என்கிற தனி மனிதர் ஆகசிறந்த காரியக்காரன், தன்னுடைய தனி வெற்றிக்காக அந்த அந்தக் காலகட்டத்தில் பலரை பயன்படுத்திக்கொண்டவர்.
திரை வெற்றி என்றால் எதையுமே யோசிக்கமாட்டார்,
எஜமான் காலடி மண் எடுத்து நெற்றியிலே பொட்டு வெச்சோம் என்கிற தொனிக்கு ஆண்டையாகவும், நான் முன்னுக்கு வருவது தான் உன் பிரச்சனைன்னா முன்னுக்கு வருவேண்டா என்று ஆதிக்கத்துக்கு எதிராகவும் பேசுவார்.
ராம் ராம் என்று ஸ்ரீ ராம அரசியல் பேசும் இவர், திரையில் இராவணக்காவியம் படிப்பார், இவ்வளவையும் செய்து கொண்டு இருக்கும் ரஜினியை முட்டாள் என்றோ அறிவில்லாதவர் என்றோ நீங்கள் நினைத்தால் ,நீங்கள் தான் முட்டாளே தவிர ரஜினி என்கிற காரியக்காரன் அல்ல,
தலைவருக்கு ஒண்ணும் தெரியாது அப்பாவி பாஜக காரன் பேசுவெக்கிறான் என்று லிபேரெல் ரஜினி ரசிகன் சொல்லுவான்
சாருக்கு ஒண்ணும் தெரியாது கார்த்திக் சுப்புராஜ் தான் நமக்கு எதிரா படம் எடுத்துட்டார்ன்னு சங்கீ ரஜினி ரசிகன் பேசுவான்
இதில் ரஜினிகாந்துக்கு யார் தோற்றாலும் பரவாயில்லை தன் குதிரை வண்டி ஓடுகிறதா என்பது மட்டுமே முக்கியம், தனக்கு ஒன்றுமே தெரியாது தான் ஒரு அப்பாவி என்கிற கணக்காக அனைவரையும் ஏமாற்றிக்கொண்டு இருப்பார்..
நேற்று  துக்ளக் விழாவில் ரஜினியின் பேச்சும் அத்தகையதே
ரஜினிகாந்த் என்கிற நடிகனுக்கு சூப்பர் ஸ்டார் உயரத்தை அடைய அவருக்கான விளபரத்திற்காக பிரச்சாரம் செய்த பத்திரிகைகள் ஊடங்கங்களின் பட்டியல் மிகவும் அதிகம், அதை பற்றியெல்லாம் ரஜினி என்றைக்காவது பேசி இருப்பாரா என்று கேட்டால் எதுவுமே இல்லை,
அதைப்பற்றி எல்லாம் பேசாமல் இதைப்பற்றி மட்டும் ரஜினி பேசியதை அயோக்கியத்தனம் என்று தான் கூறவேண்டும், ஆனால் அப்படி கூறினால் அவருக்கு பிடித்ததை தானே அவர் பேச முடியும் நாம் எவ்வாறு கட்டளை போடலாம் என்று ஒரு கூட்டம் ஒப்பாரி வைக்கும்.
இதையெல்லாம் எந்த லாபத்திற்காக ரஜினி செய்கிறார் என்று எதுவுமே தெரியாமல் கனவு உலகத்தில் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு நூறு கோடி ஊதியம் வாங்கும் ரஜினி வீட்டில் மட்டும் இதுவரை வருமானவரித்துறை ஏன் செல்லவில்லை என்று கேட்டால் ஞானம் பிறக்கலாம்..
இப்படி அனைத்து காலக்கட்டத்திலும் அனைத்தையும் பயன்படுத்திய ரஜினி, நாளை ஒருநாள் இந்த தமிழ் மக்களை மொத்தமாக பார்பனியத்திடம் அடமானம் வைக்க நினைப்பார் என்பதில் எந்த வித தயக்கமும் இல்லை...
- சையத் சுபஹான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக