திங்கள், 13 ஜனவரி, 2020

குட்கா ஊழல் ரகசியம் அறிந்த விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்பட இருவர் உயிரிழப்பு .. புளியமரத்தில் கார் மோதிய விபத்து


உயிரிழப்பு
பரம்பூர் tamil.oneindia.com - vishnu-priya : திருச்சி: திருச்சி அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்ளிட்ட இருவர்
உயிரிழந்துவிட்டனர்.
பரம்பூர் பிரேத பரிசோதனை புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பவ்(எ)வெங்கடேசன்(31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார்.
மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார்.

உயிரிழப்பு
திருச்சியில் கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் காரை ஓட்டிச் சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம் (38) உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகே இருந்தவர்கள் இருவரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும் ஓட்டுநர் செல்வத்தின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெங்கடேசனின் தாய் இந்திராஅம்மா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக