புதன், 8 ஜனவரி, 2020

இந்துமகா சபை கோடம்பாக்கம் ஸ்ரீ கந்தன் பொதுசெயலாளர் மீது பாலியல் அத்து மீறல் .வழக்கு பதிவு

அமித் ஷாவோடு  கோடம்பாக்கம் ஶ்ரீகந்தன்
Shankar A : பாலியல் புகாரில் இந்து மகாசபை தலைவர் மீது வழக்கு.
அகில இந்திய இந்து மகாசபையின், அகில இந்திய தலைவரான (அவனே அப்படி சொல்லிக்குவான்) கோடம்பாக்கம் ஶ்ரீ எனப்படும், ஶ்ரீ கந்தன் மீது, கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு பதிவு.
புகார் கொடுத்த பெண், இந்து மகாசபையின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கந்தனுக்கு ஆங்கிலம் தெரியாததால், டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் கந்தன் அவரை அழைத்து செல்வார். அப்போதெல்லாம் அப்பெண்ணிடம் கந்தன் தவறாக நடக்க முயற்சி எடுத்துள்ளார். செப்டம்பர் 2019ல், அந்த பெண்ணை கட்டிப்பிடிக்க ஶ்ரீ கந்தன் முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண், தனது பொது செயலாளர் பதவியை (பெரிய கவர்னர் பதவி) ராஜினாமா செய்துள்ளார்.
அதன் பிறகும் கந்தன் விடாமல் அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண்ணின் அண்ணனையும் மிரட்டியுள்ளார். என் ஆசைக்கு இணங்காவிட்டால், உன் பெயரை ஊர் முழுக்க நாறடித்து விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளார் கந்தன்.
கந்தனின் வேலையே, போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப் பஞ்சாயத்து செய்வதும், தகராறில் இருக்கும் நிலங்களை அபகரிப்பதுமே என்று கூறுகிறார் அந்த பெண்.

 அவரிடம் நிறைய அடியாட்கள் இருக்கிறார்கள். எனது உயிருக்கு அச்சமாக இருக்கிறது என்று காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து, கந்தன் மீது பல்வேறு பிரிவுகளில், கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீ கந்தனுக்கு, தமிழக பாஜக தலைவர்கள் பலர் நெருக்கம் என்பதால், வழக்கு பதிவு செய்த சென்னை மாநகர காவல் துறை கந்தனை கைது செய்யுமா என்பது சந்தேகமே.
டேய் கந்தா. வீரத் தலைவர்கள் இந்த வழியிலயாடா போனாங்க ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக