சனி, 4 ஜனவரி, 2020

நெல்லை கண்ணன், பார்ப்பன / காவி வெறியர்களின் அதிகார திமிரால் கைது .. சவுக்கு சங்கர்

Shankar A : நெல்லை கண்ணன் போன்ற ஒரு மோசமான சாதி வெறியரை பார்க்கவே முடியாது. வீட்டுக்கு வருபவர்களிடம் கூசாமல் என்ன சாதி என்று கேட்பார். சைவ பிள்ளை சாதியை சேர்ந்த அவர், தன்னை பார்ப்பனர்களை விட உயர்வாக கருதுவார். பார்ப்பனர்கள் யார், அவர்கள் பலம் என்ன என்பதை இப்போது உணர்ந்திருப்பார் என்று கருதுகிறேன். இது தவிர பெண்களை பற்றி மிக மிக இழிவான எண்ணம் வைத்திருப்பவர் அவர். அவரோட் பழகிய அனைவரும் இதை அறிவார்கள்.
மேடையில் மைக்கை பிடித்தால், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது. 1996 தேர்தலில், கலைஞரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராதபோது, அவரை எதிர்த்து போட்டியிட்டவர் நெல்லை கண்ணன். அப்போது கலைஞரை ஒருமையிலும், மோசமாகவும் விமர்சித்தவர். ஆனால், கலைஞர் அவர் மீது கோபம் கொள்ளவில்லை. பின்னாளில், அவர் தமிழறிவுக்காகவும், அவரை அங்கீகரித்தார்.
ப.சிதம்பரத்தை மிக மிக மோசமாக பேசியுள்ளார் கண்ணன். ஆனால் அவர் கைது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளார் சிதம்பரம்.

எஸ்.டி.பி.ஐ கூட்டத்தில், கண்ணன், மோடி குறித்தும், அமித் ஷா குறித்தும் பேசியது, நிச்சயம் தவறு. மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அதற்காக கைது செய்ய வேண்டுமா என்றால் இல்லை. காவல் துறை கண்ணனை கைது செய்யாமலேயே இவ்வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்க முடியும். ஆனால், அவரை கைது செய்ய வேண்டும் என்று, எச்.ராஜா தலைமியிலான பார்ப்பன கூட்டம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே கண்ணன் கைது செய்யப்பட்டார். இது அல்லாமல், ஆளுனர் பன்வாரிலால், தலைமை செயலாரையும், டிஜிபியையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதற்கு பிறகே கைது நடந்துள்ளது.
கண்ணன் கைது செய்யப்பட வேண்டுமென்றால், திமிர் பிடித்த பார்ப்பனர்களான ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், எச்.ராஜா, மற்றும் பார்ப்பன அடிவருடி நைனார் நாகேந்திரனும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் கைது செய்யப்படாதபோது, நெல்லை கண்ணன் மட்டும் ஏன் கைது ?
எனக்கு நெல்லை கண்ணனை பற்றி அறிந்த பிறகு அவரை சுத்தமாக பிடிக்காமல் போனது. சொந்த சாதி வெறி பிடித்து அலைபவனெல்லாம் மனிதனே அல்ல.
ஆனால், நெல்லை கண்ணனின் கைதை கண்டிக்கிறேன். இது போன்ற நேர்வுகளில், தனி நபர்களை வைத்து முடிவெடுக்க கூடாது. அந்த சூழலின் பாரதூரமான விளைவுகளையும், நியாயங்களையும் அலசியே முடிவெடுக்க வேண்டும்.
நெல்லை கண்ணன், பார்ப்பன வெறி பிடித்த கூட்டம் / காவி வெறியர்களின் கூட்டத்தின் அதிகார திமிரால் கைது செய்யப்பட்டுள்ளார். பார்ப்பனர்களின் அடிமையாக செயல்படும் முதல்வர் எடப்பாடியின் அடிமை புத்தியால் கைது செய்யப்பட்டுள்ளார். அழுத்தத்துக்கு அசைந்து கொடுக்காத அதிகாரிகள் இல்லாததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால், நெல்லை கண்ணன் கைதை கண்டிக்கிறேன். நீதித் துறையை தன் கையில் வைத்துள்ளதாக இறுமாப்போடு கொக்கரிக்கும் எச்.ராஜாவின் பேச்சுக்கு அடி பணியாமல், நெல்லை மாவட்ட தலைமை நீதிபதி, நெல்லை கண்ணனின் ஜாமீன் மனுவை நேர்மையாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக