செவ்வாய், 14 ஜனவரி, 2020

நம்மை அடையாளமாக்கும் முதல் முயற்சிதான் தமிழ் நாடு என்ற பேர் மாற்றம்

Devi Somasundaram : தமிழ் நாடு என்ற பேர் எத்தனை முக்கியமானது ? .
மனிதர்களை எப்படி அடையாளப் படுத்துவோம்...உள்ளூர்ல ரோட்ல போனா " போறது தெக்கு தெரு சிவசாமி இருக்கார்ல அவர் மூத்த பையன்" ..நம்மை பற்றி பேசுகிறவர்கள் அவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்துள்ள அடையாளத்தில் இருந்தே மனிதர்களை அடையாள படுத்துவார்கள்.
சென்னைல தின்னவேலியா தம்பின்னு ஊர் பேர் அடையாளமாகும் .டெல்லில மதராஸியா என்ற அடையாளம்..வெளினாட்ல இண்டியனா என்ற அடையாளம்... இப்படி உலகம் எதை அறிந்து வைத்திருகிறதோ அப்படி தான் அடையாள படுத்த படுவோம்.
உலகம் முழுக்க indigenous மனிதர்கள் இருக்கிறார்கள்... Aboriginal எனப்படும் புவி அமைப்பு சார்ந்து கலோனியல் ஆதிக்கத்தால் தன் இன அடையாளம் பாதிக்கபடும் மக்கள் தன் சுதந்திர வரலாற்றை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று உலகம் முழுவதும் பதிவு செய்திருக்கிறார்கள்..

அவர்களில் ஒரே மொழி கொண்ட நாட்டில் புவி சார்ந்த தேச அடையாளம் கொண்டு இருக்கலாம் ..ஆஸ்திரிலேலியாவின் பப்புவா ஜினியா மக்கள் ஆஸ்திரேலியர்கள் என்ற அடையாளம் கொண்ட இண்டிஜினியஸ் மக்கள்...கருப்பின மக்கள் தங்கள் நிறத்தால் ஆப்பிரிக்கர் என்ற அடையாளம் பெருகிறார்கள்..
தமிழ் நாட்ல நாம் மொழியால் நம் அடையாளத்தை தொலைத்தவர்கள்...நம்மை நிறத்தால் அடையாள படுத்த இயலாது...மலையாளி, கன்னடன் ,தமிழன் எல்லோரும் ஒரே நிறம்.. புவி சார் அடையாளமும் நம்மை பிரிக்க இயலாது.. அப்ப மொழி சார் அடையாளம் மட்டுமே நம் தனி அடையாளம்.
ஏன் செம்மொழி மாநாடு நடத்தபடுது ..ஓட்டரசியல்ன்னு பேசுவார்கள்...நாம நம் அடையாளத்தை உலகிற்கு . அறியபடுத்தனும் ..சிவசாமி யார்ன்னு தெரிந்து இருந்தா தான் சிவசாமி பையன்னு பேசப்பட இயலும்..அப்ப உலகிற்கு இப்படி ஒரு அருமையான மொழி இருக்கு....நான் தமிழன்னு அடையாள படுத்தனும்..
அப்ப செம்மொழி மாநாடுகள், கருத்தரங்கள், மொழிபெயர்பபுகள்ன்னு நம் மொழியை உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றால் தான் நாம் தமிழர்ன்னு உலகில் அடையாளம் ஆவோம்...
இலக்கிய அடையாளத்தில் இலக்கண உரை கொண்ட ஒரே மொழி தமிழ் தான்...
மற்ற மொழிகள் அப்படி அடையாள படுத்த தவறியதால் தங்கள் அடையாளம் இழந்து வருகிறது.. முக்கியமா பெங்காலி மொழி ..
அப்படி நம்மை அடையாளமாக்கும் முதல் முயற்சிதான் தமிழ் நாடு என்ற பேர் மாற்றம்.
நம் வேர்களை இந்திய நாட்டுக்கும் பன்னாட்டு சமுகதிற்கும் இந்த பேர் அடையாள படுத்தும்...
வேர்கள் , அடையாளம் அத்தனை முக்கியமா ? ... சும்மா இருந்தா மெனக்கெட்டு அடையாளப்படுத்த தேவை இல்லை.. உதாரணமா ..என்னை தேவின்னு கூப்பிட்டா அதுல பேச எதுமில்ல...திடிர்ன்னு ஒருத்தர் தேவி ரவிகுமார்ன்னு கூப்பிட்டா என் அடையாளம் தொலைந்து போய் பொய் அடையாளம் வந்து சேர்கிறது ...சோமசுந்தரம் மகள் என்ற அடையாளத்தை அழித்து ரவிகுமார் மகளா மாற்றபடும் ஆபத்து நேர்கிறது.. அப்ப நான் சோமசுந்தரம் மகள் என்பதை உரத்து சொல்லியாகனும்.இல்லை என்றால் என் வரலாறு மாறிவிடும் .
தமிழன் இந்து என்று அழைக்க பட்டது அத்தகைய இன அழிப்பு தான்..மதம் அற்ற தமிழன் என்ற அடையாளம் இந்து என்ற மத அடையாளமாக மாற்ற்பட்ட போது இல்ல நான் தமிழன்னு கத்தி சொல்ல வேண்டி இருந்தது..
அதன் ஒரு பகுதி ஹிந்தி எதிர்ப்பு, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து. தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்ற பேர் .. இவற்றால் உலகம் தமிழை அறிந்து நம்மை தமிழன்னு அடையாள படுத்துகிறது ..
தமிழ் நாட்டிற்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்டி நம் அடையாளம் மீட்ட 50 வது ஆண்டு தினம் இன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக