ஞாயிறு, 19 ஜனவரி, 2020

வேலூர் . காதலனை கத்திமுனையில் வைத்து காதலி மீது பாலியல் பலாத்காரம் வேலூர் கோட்டை அருகே ...

tamil.oneindia.com : வேலூர்: வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையிலேயே வைத்து இளம்பெண்ணை 3 பேர் நாசம் செய்துள்ள சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்!
வேலூரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் கோட்டை.. வெளி மாநிலம், வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோட்டையை வந்து பார்வையிட்டு போவார்கள்.. உள்ளூர் மக்களும் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து செல்வது வழக்கம்.
இதைதவிர, காதலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்களும் கோட்டையை சுற்றி உள்ள பூங்கா பகுதிகளில் அரங்கேறும் உண்டு.. பெரும்பாலான இடங்கள் இங்கு புதர்போல மண்டி கிடப்பதால் இளம்ஜோடிகளுக்கு வசதியாக போய்விட்டது.
 இந்நிலையில், வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. அவருக்கு வயது 24.. அதே கடையில் காட்பாடியை சேர்ந்த ஒரு இளைஞரும் வேலை பார்க்கிறார்.. இவரும் காதலித்து வந்தனர்.. வேலூர் கோட்டை அருகே தனியாக சந்தித்து பேச முடிவு செய்தனர். அதன்படி, கோட்டை பூங்காவிற்கு சென்று, ஒரு ஓரத்தில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

 இவர்களை 3 பேர் கும்பல் நோட்டமிட்டு கொண்டே இருந்தது.. பிறகு இளம்பெண்ணிடம் நெருங்கி, அவரது கையை பிடித்து தரதரவென இழுத்தனர்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலன், அவர்களிடம் பெண்ணை மீட்க போராடினார்.. ஆனால் அவரையும் அந்த கும்பல் அடித்து உத்தது.. பின்னர் திடீரென பாக்கெட்டில் இருந்து பெரிய கத்தி ஒன்றை எடுத்து, காதலனின் கழுத்தில் வைத்து.. மிரட்டி... உட்கார வைத்தனர்.

இளம்பெண் அணிந்திருந்த கம்மலையும், அவரது செல்போனையும் பறித்து கொண்டனர்.. அதன்பின்னர் 3 பேரும் மாறி மாறி சீரழித்துள்ளனர்.. இளம்பெண்ணோ கத்தி கூச்சலிட்டார்.. அதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பெண்ணின் முகத்திலேயே மாறி மாறி குத்தினர்.. எனினும் சத்தம் கேட்டு சிலர் ஓடி வந்துவிடுவார்களோ என்ற பயத்தில், 3 பேருமே தப்பி ஓடிவிட்னர்

வலியால் துடித்த இளம்பெண்ணை கண்டு கண்ணீர் விட்டு அழுத காதலன், இதுபற்றி வேலூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமான விசாரணையை போலீசார் உடனடியாக ஆரம்பித்தனர்
அண்ணா சாலையில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.. அதன்படி, பெண்ணை சீரழித்து தப்பியோடிய 3 பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.. மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள். இந்த 3 பேரும் கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. எந்நேரமும் பொதுமக்கள் நடமாட்டத்துடன்... வேலூரின் மையப்பகுதியில்... வரலாற்று புகழ்வாய்ந்த கோட்டை பகுதியிலேயே... உள்ளூர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களை அதிர்ச்சி கலந்த வேதனையில் ஆழ்த்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக