ஞாயிறு, 19 ஜனவரி, 2020

நடிகை ஷபான ஆஸ்மி விபத்தில் சிக்கினர் .. மருத்துவ மனையில் அனுமதி வீடியோ


மின்னம்பலம் : திரைத்துறையில் ஐந்து முறை தேசிய விருது வெற்றி, ஒரு முறை எம்.பி-யாக பதவி வகித்தது, பதவியில் இல்லாவிட்டாலும் சமூக சேவையில் ஈடுபடுவது என பல்வேறு முகங்கள் கொண்ட ஷபானா அஸ்மி, மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கிய நிகழ்வு அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், ஷபானாவின் ரசிகர்கள் எனப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மும்பைக்கு காரில் திரும்பியிருக்கிறார் ஷபானா. மும்பைக்கு 60 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இடத்தில், ஒரு மிகப்பெரிய் டிரக்கின் பின்பக்கத்தில் ஷபானாவின் கார் மோதியதால் ஷபானா, டிரைவர் மற்றும் அவருடன் பயணித்த இன்னொருவர் ஆகிய மூவரும் விபத்தில் சிக்கினர். இதில் டிரைவருக்கு மட்டுமே பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், ஷபானாவுக்கு மூக்கில் மட்டும் சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முதலில் மும்பை MGM மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஷபானா, இப்போது அம்பானியின் அதிநவீன மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். விரைவில் நலமாகிவிடுவார் என்று மருத்துவமனை தரப்பில் சொல்லப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக