வெள்ளி, 31 ஜனவரி, 2020

அதிமுக கூட்டுறவு கடன் சங்க தலைவி பிரேமா விபச்சார வழக்கில் கைது!

Mahalaxmi : இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய அதிமுக பிரமுகர் பிரேமா கைது ....
அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியாம்..
உம்ராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும்கூட.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உம்ராபாத் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் நிறைய விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
லாட்ஜ்கள் தவிர, தனி வீடுகள் எடுத்தும் இந்த விபச்சாரம் நடப்பதாகவும், இதற்காகவே வெளிமாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் செய்கிறார்கள் அடுத்தடுத்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.
இதுகுறித்த உடனடியாக உயரதிகாரிகளுக்கு விஷயம் சென்றது, அதனால் ரகசிய விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது
அதனடிப்படையில், போலீசாரும் விபச்சாரம் நடப்பதாக சொல்லப்பட்ட லாட்ஜ்கள், வீடுகளை ரகசியமாக கண்காணித்தனர்..அப்போதுதான் சம்பந்ததப்பட்ட இடங்களில் ஏராளமான இளம்பெண்கள் நடமாட்டத்தை அறிந்தனர்
மேலும் இதற்கெல்லாம் காரணம் பிரேமா என்ற பெண் என தெரியவந்தது..இவர் உமாராபாத் பகுதியை சேர்ந்தவர்தான்.. அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி... உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும்கூட.
இத்தனை பொறுப்புகளை வகித்த பிரேமாதான் இந்த தொழிலை நடத்தி வந்துள்ளார்.

இந்த தகவலையும் போலீசார் தங்களது உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க.. அவர்களது உத்தரவுப்படியே பிரேமாவை ஆம்பூர் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்..மகளிர் ஸ்டேஷனில் பிரேமாவை வைத்து விசாரித்தும் வருகிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து இளம்பெண்களை வரழைத்த பிரேமா, உமாராத் பகுதியில் மட்டுமல்லாது, சுற்றுவட்டார ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர், குடியாத்தம் போன்ற பகுதிகளுக்கும் இந்த பெண்களை அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
எனினும் பிரேமாவிடம் முழு விசாரணை நடந்தால்தான் இது பற்றின உண்மைதன்மை தெரியவரும்
பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது உள்ளூர் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக