வெள்ளி, 3 ஜனவரி, 2020

சென்னை பார்ப்பன, பனியா, மார்வாரிகளின் சொர்க்கபுரியாக மாற்றப்படுகிறது!

தமிழ் மறவன் : சென்னை அமைந்தகரை பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாய் இருந்த பூர்வகுடி மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கி பெரும்பாக்கத்திற்கு விரட்டியபோது, நான் ஒருவன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தேன்.
அந்த பகுதி மக்களே கூட வரவில்லை.
கதறினேன், இது ஆரம்பம்தான் என்று அன்றே சொன்னேன்.
இதோ, இன்று சத்தியவாணி முத்து நகர்!

இது மிக வேகமாய் இன்னும் தொடரும்....
பார்ப்பன, பனியா, மார்வாரிகளின் சொர்க்கபுரியாக சென்னை மாற்றப்படுகிறது!
தங்கள் பொருளியல் வாழ்வு, உறவு, கல்வி எல்லாவற்றையும் இழந்து தன் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாய் மக்கள் போவதைக் கண்டு மனம் பதைக்கிறது.
இதற்காக என்ன செய்யப் போகிறோம்?
மீண்டும், மீண்டும் சொல்கிறேன் இதேநிலை நீடிக்குமானால் சென்னைக்குள் தமிழர்கள் நுழைய பார்ப்பன, பனியா, மார்வாடிகளுக்கு கூலிக்கு மாரடிப்போருக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கும் நிலையும் நிச்சயமாக வரும்!
ஆம், மண்ணின் மைந்தர்களுக்கான உரிமை முழக்கம், விடுதலையை நோக்கியதாய் நகர வேண்டிய தருணம்.

உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்! ஆனால் உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை
எமது சுதந்திரம் எமது சுயமரியாதை என்பார் மேதகு தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன்.
குறைந்தபட்சம் அடிமை அரசின் அதிகாரத்தைக் கூட எதிர்க்க அணி திரளாமல் நமக்கென்ன என இருந்தால் நாளை நீங்களும் அகதிகளே!
நம் அடுத்த தலைமுறையை அடிமைகளாகவோ, அகதிகளாகவோ விட்டுச் செல்ல வேண்டுமா?
நாம் என்ன செய்யப்போகிறோம்?
- மு.தமிழ் மறவன்.
Kanimozhi MV : இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் தோழர் வாழ்ந்த இடத்தை விட்டு மக்களை துரத்திவிட்டு எதை அழகாக்க போகிறார்கள் Muni Samy : கண்ணீர் வருகிறது. இந்த அடிமை அரசு ஒட்டு மொத்த தமிழகத்தையும் பாசிச பாசக அடிமையாக்கும் வேலையைத்தான் செய்து வருகிறது. இனியும் இவர்கள் அதிகாரத்தில் இருந்தால் நாளொரு போரட்டமாகத்தான் நம் வாழ்க்கை இருக்கும். அன்றாடம் வேலைசெய்து சிறுக சிறுக சேமித்த பொருட்களை நடுவீதியில் பார்க்கும் போது நமக்கே மனம் பதைக்கிறதே அவர்களின் எதிர்காலம் என்னவாகுமே என்று. அது ஏன் இந்த அடிமை ஆட்சியாளர்களுக்கு உரைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக