புதன், 15 ஜனவரி, 2020

உங்களை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா?... ஆரம்பம் இன்றே ஆகட்டும் ..

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அறிவு மிக மிக அபூர்வமானது. நிச்சயமாக அது ஒரு நிகரற்ற அறிவுதான்.
அவரவர்களுக்கு ஏற்ற தேவையான அறிவு ஒவ்வொரு ஜீவராசிக்கும் மிக சரியாகவே உள்ளது.
நாம் இயற்றி கொண்ட அளவுகோல்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பது போல்தான் தெரிகிறது.
ஆத்மீக வேட்கை உள்ளவர் எப்பொழுதும் சாந்த சொருபியாக சுயநலம் அற்று பரோபகார சிந்தை உள்ளவராக இருக்கவேண்டும் . அத்தோடு அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கவேண்டும் . அதாவது அமானுஷ்யமான மர்ம சக்திகள் உள்ளவராகவும் இருக்கவேண்டும் போன்ற எதிர்ப்பார்ப்புக்கள் நமக்குள் குடி கொண்டுவிட்டது.
;நாம் இது போல ஏராளமான கோட்பாடுகளை கண்டு பிடித்திருக்கிறோம்.
இந்த வகை கோட்பாடுகள் ஒரு வகையில் கோழிக்கூடுகள் போன்றவை.
இதில் வளர்க்கப்பட்ட  நாமும் ஒருவகை பிராய்லர் கோழிக்குஞ்சுகள் போலத்தான் வாழ்கிறோம்.
இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் பற்றியும் நமது பிறப்பு இறப்பு போன்ற வாழ்க்கை சங்கிலி தொடர் பயணம் பற்றியும் எதுவித சுய ஆராய்ச்சியும் மேற்கொள்ள தெரியாமல் இருக்கிறோம்.
எமது அடிப்படை கேள்விகளுக்கு எந்தவித சுய சந்தேகமும் கொள்ளாமல் சமுதாயம் கூறும் பதில்களை அப்படியே விழுங்கி கொண்டிருக்கிறோம்.
அதற்கு காராணம் நாம் சுயமாக வளரவே இல்லை என்பதுதான்.
பிரபஞ்சம் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில்களை மதங்கள் எறிகின்றன.
அந்த பதில்கள் பிராய்லர் குஞ்சுகளுக்கு போடுவது போன்ற உணவு போன்றதாகும் .

அவற்றை உண்டு உண்டு அதை தாண்டி உணவை தேடவேண்டும் என்ற சிந்தனையோ வேட்கையோ அற்றவர்கள் ஆகிவிட்டோம்.

இதுதான் நமது மிகப்பெரும் பிரச்சனை.
இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு பெரிய சிங்காசனத்தை  வழங்கி உள்ளது.

ஒவ்வொரு ஜீவராசிக்கும்  அதன் தோற்றத்துக்கும்  மாற்றத்திற்கும் மறைவுக்கும் மீண்டும் தோன்றுவதற்கும் காரணங்கள் உண்டு.
காரணங்கள்தான் காரியத்தின்  அத்திவாரம்.
அந்த காரணங்களுக்கு தேவையான அத்திவாரம் மட்டுமல்ல அதன் மீது கட்டி எழுப்ப வேண்டிய கட்டிடத்திற்கு தேவையான  வசதிக்கும் சக்திக்களும்கூட  ஒவ்வொரு ஜீவராசிக்கும் இந்த இயற்கை வழங்கி கொண்டுதான் இருக்கிறது.
இதை பற்றி கொஞ்சம் கூட சிந்தன எமக்கு எட்டி விடக்கூடாது என்பதில்  மதங்கள் மிகவும் கவனமாக இருக்கின்றன.
அவைகள்தான் அந்த காலத்து கம்பனிகள். இன்றும் பலம் வாய்ந்தவையாக இருக்கும் வர்த்தக ஸ்தாபனங்கள் அவை. அவற்றிக்கு தேவை இலாபம் மட்டுமே.
ஜீவராசிகளின் பூரண அறிவை பற்றி அவைகளுக்கு அக்கறை இல்லை என்பது புரிந்து கொள்ள கூடியதே.
உங்கள் கண்ணுக்கும் காதுக்கும் மற்றும் ஐம்புலன்களுக்கும் எட்டிய இந்த இயற்கையை கொஞ்சம் உங்கள் சொந்த புலன்கள் வழி உறவாடுங்கள்.
அது உங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக பல அனுபவங்களை தரும் .பல செய்திகளை கூறும் . நீங்கள் வேறு அது வேறல்ல என்பதை உங்களுக்கு காட்டும்.
நீங்கள் உங்கள் ஐம்புலன்களை அடகு வைத்துவிட்டு போலி புலன்களால் பிரபஞ்சத்தை தரிசிக்க முடியாது.
உங்கள் சொந்த புலன்களுக்கு மட்டுமே அது வெளிப்படும்.
அந்த அனுபவம் எனக்கு தாராளமாக கிடைக்கும் தைரியத்தில்தான் இவ்வளவு உறுதியாக என்னால் கூற முடிகிறது.
நீங்கள் நீங்களாக மட்டுமே இருங்கள் .
அதுதான் உங்களை நோக்கி உங்கள் பிரபஞ்சம் நீங்களாகவே  வெளிப்படும் நிலை கைகூடும்.
இதில் ஒன்றும் இரகசியம் கிடையாது.
ஆனால் உண்மையில் நீங்களாகவே இல்லை என்பதை நீங்கள்தான் கண்டு பிடிக்கவேண்டும்.  
அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க நீங்கள் கொஞ்சம் சிரத்தையோடு முயற்சிக்க வேண்டும் .
எண்ணியர் எண்ணியதாங்கு எய்துவர் ..எண்ணியர் திண்ணியர் ஆகப்பெறின் என்ற திருக்குறள் வாக்கியம் போல திண்ணமாக தீர்மானிக்க வேண்டும்.

இதில் முதல் பயிற்சியாக சில கருத்துக்களை கூறுகிறேன்... ராதா மனோகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக