புதன், 29 ஜனவரி, 2020

பறிபோகும் உயர் மருத்துவம் .. அதிமுக அரசின் துரோகம் .. மத்திய அரசின் தமிழ்நாடு கொள்ளை

Satva T : அடிமை அதிமுக பிஜேபி ஆட்சியாளர்களின் மற்றுமொரு துரோகம்....
தமிழக மருத்துவ உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான (DM/Mch) சிறுநீரகவியல், இதயவியல், மூளை நரம்பியல் முதலியவற்றை முழுவதுவாக 100% யையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டது. அவற்றில் தமிழக மருத்துவர்களுக்கோ அல்லது அரசு மருத்துவர்களுக்கோ எந்தவித இட ஒதிக்கீடும் இல்லை. அது மட்டுமல்லாது SC/ST/MBC பிரிவினருக்கும் எந்த ஒதுக்கீடும் இல்லை.
ஆனால் இது தொடர்பாக மாநில அரசு ஒரு மேல்முறையீட்டு வழக்கு கூட தொடரவில்லை. கூடுதலாக நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களிலும் இந்த படிப்புகளுக்கான நீட் விலக்கு (NEET-SS) கோரப்படவில்லை. இவ்வாறு தமிழக சுகாதார கட்டமைப்பை முழுவதும் சிதைத்து அரசு மருத்துவமனைகளை நம்பி இருக்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை நாசப்படுத்தியுள்ளது தற்போதைய அதிமுக மாநில அரசு.
அடுத்த தேர்தலில் இந்த அரசு தோற்கடிக்கப்பட்டு திமுக அரசு கொண்டு வரப்படவில்லை எனில் தமிழகம் ஐம்பதாண்டுகள் பின்னால் தள்ளப்படுவது உறுதி.

Sivasankaran Saravanan : நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைக்கப்பட்டு வருகிறது ஒருபக்கம். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் Post graduate மருத்துவ மேற்படிப்புகளை முழுவதுமாக ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டுவிட்டது.

இனி தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் இல்லை. ஆளும் அதிமுக அரசு , துளி எதிர்ப்பைக்கூட தெரிவிக்கவில்லை. இதுபோதாதென்று சுகாதாரத்துறை அமைச்சரும் , துறைச்செயலாளரும் கூட்டணி அமைத்துக்கொண்டு இருக்கிற அரசு மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்புகிற வேலையை செய்துவருகிறார்கள். அரசு மருத்துவர்கள் இனி எதற்காகவும் போராட போவதில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
“தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறையை இந்தியாவோடு ஒப்பிடக்கூடாது- உலகின் வளர்ந்த நாடுகளின் சுகாதார கட்டமைப்போடு தான் தமிழ்நாட்டை ஒப்பிடவேண்டும்..!” என சட்டமன்றத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அது உண்மையுங்கூட.
அத்தகைய சிறப்புமிக்க தமிழக பொது சுகாதார கட்டமைப்பு நம் கண் முன்னரே சிதைத்து சின்னாபின்னமாக்கப்படுகிறது..! இதை தடுத்து நிறுத்தாவிடில் தமிழ்நாட்டு மக்கள் மிக மோசமான நிலையை சந்திப்பது நிச்சயம்..!
By Sivasankaran Saravanan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக