வியாழன், 2 ஜனவரி, 2020

சென்னை கோலப்போராட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு.. சென்னை போலீஸ் கமிஷனர் விவஸ்தைநாதன் திடுக் தகவல்


Anti CAA Kolam protesters and Pakistan connection, Chennai Police commissioner reveals tamil.oneindia.com - veerakumaran : சென்னை: சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்தியவர்களுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திடுக்கிடும் தகவலை, தெரிவித்தார்.
சென்னையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்தார் போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன். அப்போது 2018 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் சென்னையில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன என்பது தொடர்பாக புள்ளி விவரங்களை வெளியிட்டு அவர் பேட்டியளித்தார். இதன்பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கொடுத்தார்.
இந்த பேட்டியின் போதுதான் கோல போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவலை விஸ்வநாதன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், காயத்திரி கந்தாடே, என்பவரின் முகநூல் பதிவை ஆய்வு செய்தபோது, அதில் bytes for all என்ற பாகிஸ்தான் அமைப்பில் ஆராய்ச்சியாளராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
'அசோசியன் ஆஃ ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜர்னலிஸ்ட்' என்ற அமைப்பில் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது. இவர்களுக்கு, எந்த அளவில் பாகிஸ்தான் தொடர்பு இருக்கிறது? இங்குள்ள பல அமைப்புகள் இவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அறப்போர் இயக்கம், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா போன்றவை இவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக நமக்குத் தெரிய வருகிறது. எனவே, பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

கோலம் விவகாரத்தில் நான் ஒரு விளக்கம் தெரிவிக்க விரும்புகிறேன். கோலம் போடும் போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் என்று காவல்துறையிடம் அவர்கள் கேட்டபோது காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அதே நேரம் கோலம் போட்டதை, காவல்துறை தடுக்கவும் இல்லை. அவர்கள் ஏற்கனவே ஏழெட்டு, கோலங்கள் போட்டு விட்டனர்.
மற்றவர்கள் வீடுகள் முதற்கொண்டு பல இடங்களிலும் அவர்கள் அப்படி கோலம் போட்டனர். ஆனால், ஒரு வீட்டில் ஏற்கனவே அந்த வீட்டுக்காரர்கள் போட்ட கோலத்தின் பக்கத்தில், NO CAA என்று இவர்களாக சென்று எழுதி வைத்தனர். எனவே அந்த வீட்டுக்காரர்கள் அவர்களிடம் தகராறு செய்தனர். இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்துதான் காவல்துறை அங்கு சென்று கோலம் போட்டவர்களை அங்கிருந்து கிளம்பிச் செல்ல வற்புறுத்தியது.
ஆனால் காவல்துறை பேச்சை கேட்காமல் காவல் துறைக்கு எதிராகவே கோஷமிட தொடங்கினர். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். கோலம் போட்டதற்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்பதை நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு விஸ்வநாதன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக