செவ்வாய், 28 ஜனவரி, 2020

: பெரியாரிய இயக்கங்களில் ஏன் பார்ப்பனர்களை சேர்ப்பதில்லை..!? -

திருச்சி பெரியார் சரவணன். புத்தருக்கு பிறகான 400 ஆண்டுகளில் 108 பிரிவுகளாக பௌத்தம் உடைந்ததாக தெரிகிறது,
இந்த 108 பிரிவுகள் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் 18 பிரிவுகள் பற்றிய செய்திகள் முழுமை யாக இருக்கின்றன..!
அவை...
1) ஸ்தவரம்.
2) மஹிசாசக்.
3) விரிஜிபுத்ரக்.
4) தர்மோத்ரி.
5) பத்ரயாளிக்.
6) சன்னகாரிக்.
7) சம்மியதிக்.
8) மகா சாங்க்கியம்.
9) கோகுலிக்.
10) ஏக வியாவ ஹாரிக்.
11) பிரெஞ்ஞாப்தி.
12) பாகுலிக்.
13) சைதன்ய.
14) சர்வாஸ்தி.
15) தர்மகுப்தி.
15) காஸ்யபீய.
16) சங்கராந்திக்.
17) நடுவு தளபதி .
18) சூத்திரக்.
இந்த 18ம் பௌத்தப் பிரிவுகள்..!
இதையெல்லாம் கடந்து கி.மு. 200ல்,ஆந்திரப் பகுதியில், பௌத்தத்தின் மூலக்கருத்தி லிருந்து விலகி..!?
பௌத்தத்திலிருந்து விலகிப்போன பிரிவுகளின் தத்துவக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு..!
மஹாயானம் என்கின்ற மிகப் பெரிய பௌத்தப் பிரிவு ஒன்று உருவாகியது.
இதை உருவாக்கியது ஸ்ரீ பர்வதம் என்று அழைக்கப்படும்,நாகார்ஜுனாகுண்டாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகார்ஜுனன் என்கின்ற பார்ப்பனன்.

ஆரியப் பார்ப்பனர்களை எதிர்த்து உறு வான புத்தரின் தேரவாதத் தத்துவதை, உள் நுழைந்து சிதறடித்தது மட்டுமல்லா மல்,
இன்றுவரை புத்தரைமக்களிடம்கொண்டு செல்லாமல் பார்த்துக் கொண்டது மட்டு மல்லாமல், பௌத்தத்தை நீர்த்துப் போகச் செய்ததும் இந்த, நாகார்ஜுனன் என்கின்ற பார்ப்பனன்தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக