சனி, 18 ஜனவரி, 2020

5,8 ஆம் வகுப்பு பொது தேர்வு இனி சொந்த பள்ளிகளில் எழுத தடை. மாணவர்கள் மீதான தொடர் தாக்குதல்

ஆலஞ்சியார் : என்ன வக்கிரம் . ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு
பொதுதேர்வெழுத வேறுபள்ளிக்கு செல்லவேண்டுமாம். பத்துவயது குழந்தை மீது திணிக்கபடும் பொதுதேர்வே சகிக்கமுடியாத பெரும்குற்றம் ..வெகுவாக குழந்தைகளை மனதளவில் பாதிக்கும் கொடுஞ்செயல் இதில் படித்த பள்ளியில் எழுத கூடாதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்
ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தில் ஊறுப்போனதால் சிந்திக்கும் ஆற்றலை இழந்தார்கள் இப்போது சைக்கோவாகவே மாறியிருப்பதை தான் இது காட்டுகிறது ..
சாதாரணமானவனுக்கு மிகவும் விளிம்புநிலை மக்களுக்கு,ஏழைகளுக்கு கல்வி மறுக்கபடுவதற்கு சமம் தொடர்ந்து மனதளவில் தளர்த்தி அக்குழந்தையை உயர்கல்விக்கு தகுதியில்லாதவனாக மாற்றி ..அப்பன் தொழிலை செய் அடிமையைபோல கூலிப்பணிக்கு செல் கல் உடை என சொல்லாமல் சொல்கிறது .. கல்வி எல்லோருக்கும் எளிமையாக கிடைக்கவேண்டுமென்பதற்காக உலகில் எல்லா நாடுகளும் எளிமையான முறையில் பயிற்றுவிக்க நினைக்கிறது ஆனால் இந்தியாவில் தலைகீழ் .. filter வடிகட்டுவதாக சொல்லி தகுதியுள்ளவர்கள் மேலே வரட்டுமென திசை திருப்பி ஒரு குறிப்பிட்ட வர்க்கம் பணமுள்ளவன் மட்டுமே கல்விகற்கும் நிலைக்கு கொண்டுவருவதே அரசின் நோக்கமென்கில் இந்த அரசை வீழ்த்தியே ஆகவேண்டும் ..


..
நன்னூல் சொல்கிறதே என் மகன் என் ஆசானின் மகன் மண் மகன் (மன்னரின்மகன்) பொருள் தருவோரின் மகன் அதைபோல தர நினைக்கிறதை
ஏழைகளுக்கு கல்வி இனி இல்லையென அரசே சொல்லாமல் சொல்கிறதா .. பெரியாரும் அண்ணாவும் பேரருளானன் கலைஞரும் பாடுபட்ட படித்த சமூகத்தை உருவாக்க வேண்டுமென நினைத்தார்களே அதில் மண் அள்ளி போட அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் எண்ணலாமா .. ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் துவக்க பள்ளி துவங்கி குழந்தை அருகிலேயே கல்வி கற்க செய்தாரே பெருந்தகையாளர் கலைஞர் அவரின் கனவை சிதைக்க நினைக்கிறார்களா. எட்டாயிரம் பள்ளிகளை ராஜகோபாலச்சாரி மூடிவிட்டார் அதை திறக்க ஏற்பாடு செய்யுங்களென பெரியார் கேட்டுக்கொண்டதறிகிணங்க துவக்கபள்ளிகளை துவங்கினாரே காமராஜர் ..
பள்ளிக்கு குழந்தை அனுப்ப மறுக்கிறார்கள் என்ற போது மதிய ஒருவேளை உணவை போடுங்கள் தகப்பன்கள் குழந்தைகளை அனுப்புவார்களென பெரியாரின் பேச்சை கேட்டு துவங்கி.. அதற்கான நிதிஆதாரம் இல்லாதபோது தனவந்தர்களிடம் பெற்று அதுவும் போதாது என வந்த போது
விவசாயிகளிடத்தில் முதல் மரைக்காய் நெல்லை சாமிக்கும் இரண்டாவது மரைக்காய் நெல்லை ஊர் கோவிலுக்கும்,கொடுக்கிறீர்களி மூன்றாவது மரைக்காய் நெல்லை எனக்கு தாருங்கள் நான் குழந்தைகளுக்கு சோறுபோடுகிறேன் என காமராஜர் கேட்டாரே இப்பேர்பட்ட பெருமகன்களின கனவை நசுக்கபார்க்கிறதா பாசிசம் ..
..
இவர்களின் நோக்கம் இதுதான் வடிகட்டல் என்ற பெயரில் நம் குழந்தை படிப்பதை ஏழைகள் வக்கற்றவனின் குழந்தைகள் உயர்கல்வி நோக்கி வருவதை ஆரம்பத்திலேயே தடுத்த நிறுத்த உங்கள் தொழிலை நீங்கள் செய்யுங்கள் உங்களுக்கு கல்வி எதற்கு என அடிமைகளின் எஜமானர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள் ..
இனியும் நீங்கள் அமைதி காத்தால் குலத்தொழிலை தான் செய்யவேண்டிவரும் இந்த அரசை ஒரு நொடிபொழுதுமே தாமதியாமல் கவிழ்க்க வோண்டும் நேர்மையாக செய்வோமென இனியும் காலங்கடத்துவது சமுகத்திற்கு செய்கிற கேடு ..
தீமையை கண்டு எழுவது கூட அறம் தான்
இந்த அடிமை அதிமுக அரசு வீழ்த்த வேண்டியது நமது கடமை ..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக