சனி, 11 ஜனவரி, 2020

குஜராத்தில் தலித் சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் கொலை - 4 பேர் கும்பல் அட்டூழியம்


மாலைமலர் : அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 31-ந் தேதி மாயமானார்.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். தங்களது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் எனக் கூறி இருந்தனர்.
ஆனால் அந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் உள்ளதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறிய போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இளம்பெண் அங்குள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறிய போலீசார் முறையாக விசாரிக்கவில்லை.
இதனால் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரை கடத்தி கொலை செய்துள்ளனர். கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என ஆவேசமாக கூறினர்.


பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடல் அகமதாபாத் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் பிமல், தர்‌ஷன், சதீஷ் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கும்பல், பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Prakash JP : பிஜேபி ஆளும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 19 வயது இந்து தலித் பெண்ணை ஆதிக்க சாதி வெறியர்கள் பாலியல் வல்லுறவு செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்திருக்கிறார்கள்..
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், காவல்துறையில் புகார் கொடுக்கும்போது, அதை வாங்காமல் இழுத்தடித்துள்ளது குஜராத் மாநில போலீஸ். முதலிலேயே புகார் பதிவு செய்து விசாரணை நடைபெற்றிருந்தால், அந்தப் பெண்ணை உயிருடன் மீட்டு இருக்கலாம்.. ஹைதராபாத் போலீஸ் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததைப் போல, இந்த குஜராத் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வார்களா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக